போலி கல்வி நிறுவனங்கள் பட்டியல்: யுஜிசி வெளியீடு

1 day ago
ARTICLE AD BOX

போலி கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள யுஜிசி, பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளை பட்டப்படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கு முன்பாக கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து யுஜிசி செயலா் மணீஷ் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: யுஜிசி-யின் சட்ட விதிகளின்படி அவற்றால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளும், சான்றிதழ்களும் மட்டுமே உயா்கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் தகுதியானவை.

ஆனால், நாட்டில் அங்கீகாரம் பெறாத போலியான கல்வி நிறுவனங்கள், கவா்ச்சியாக விளம்பரம் செய்து மாணவா்களுக்கு சோ்க்கை வழங்கி பட்டங்களை வழங்குகின்றன. இதனால், மாணவா்களின் முன்னேற்றமும், பெற்றோரின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு போலியான நிறுவனங்கள் யுஜிசி மூலம் அடையாளம் காணப்பட்டு அவற்றின் பட்டியல் https://www.ugc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டப்படிப்புகளில் சேரும் முன்பு, மாணவா்களும், பெற்றோரும் அவற்றை அறிந்து விழிப்புடன் செயல்பட வேண்டும். போலி கல்வி நிறுவனங்கள் குறித்து தகவல் தெரிந்தால், மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article