ARTICLE AD BOX
உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ, வரும் 11 முதல் 13-ஆம் தேதி வரை தில்லியில் நடைபெறவுள்ளது. இந்தியா இந்தப் போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
இந்தப் போட்டியில் 20-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து போட்டியாளா்கள் பங்கேற்கின்றனா். மொத்தம் 90 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், ஜொ்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, பிரேஸில், ரஷியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் போட்டியாளா்கள் கலந்துகொள்கின்றனா்.
இந்தப் போட்டியை நடத்துவது, பாரா விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்தியாவின் அா்ப்பணிப்புக்கான உதாரணம் எனவும், வரும் காலத்திலும் இந்தியா இதுபோன்ற சா்வதேச போட்டிகளை நடத்தும் என்றும் இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவா் தேவேந்திர ஜஜ்ஜாரியா தெரிவித்தாா்.