CT 2025: காயம் காரணமாக முக்கிய வீரர் திடீர் விலகல்…. தவிக்கும் ஆஸ்திரேலிய அணி…!!

3 hours ago
ARTICLE AD BOX

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானது இன்று துபாயில் நடைபெற உள்ளது. மதியம் 2:30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர் பார்த்து இருக்கிறது. அதேபோல இந்த போட்டியை வென்று பைனலுக்கு செல்ல ஆஸ்திரேலியா அணியும் முனைப்பு காட்டுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த போட்டியானது இன்று நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் ஆல்ரவுண்டர் மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக விலகியுள்ளார். இவருக்கு பதிலாக கூப்பர் கோனொல்லி சேர்க்கப்பட்டுள்ளார். சாம்பியன் டிராபி தொடருக்கு முன்பாகவே முக்கிய வீரர்கள் விலகினாலும், ஆடிய 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தன்னுடைய வலுவான ஆதிக்கத்தை வெளிப்படுத்தி உள்ளது.

Read Entire Article