ARTICLE AD BOX

மும்பை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்மகர் ஷிவல்கர். இவருக்கு 84 வயது ஆகும் நிலையில் உடல் நலக் குறைவின் காரணமாக காலமானார். இவர் இடது கை சுழற் பந்துவீச்சாளராக இருக்கும் நிலையில் மும்பை அணிக்காக கிட்டத்தட்ட 20 வருடங்கள் விளையாடியுள்ளார்.
கடந்த 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியின் போது 5 விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற வழி வகுத்தார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மும்பை அணி ஒரு பெரும் ஜாம்பவானை இழந்துவிட்டது என MCC தலைவர் அஜிங்க்யா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இவருடைய மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.