திருமா அண்ணே, சிபிஎஸ்இ பள்ளிக்குத் தலைவரா இருக்கீங்க?- அண்ணாமலை சொல்லும் ’ஆதாரம்’!

6 days ago
ARTICLE AD BOX

மும்மொழிக் கொள்கையை எதிர்த்துப் பேசும் வி.சி.க. தலைவர் திருமாவளவன், மும்மொழிகள் பயிற்றுவிக்கும் சி.பி.எஸ்,இ. பள்ளிக்குத் தலைவராக இருக்கிறாரே என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

இன்று காலையில் அண்ணாமலை இதுகுறித்து தன் சமூக ஊடகப் பக்கங்களில் கூறியிருப்பது:   

”தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, தி.மு.க.வினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திரு. திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் புளூஸ்டார் செகண்டரி பள்ளி (Blue Star Secondary School) -யின் நிர்வாகக் குழு தலைவர், அண்ணன் திரு. திருமாவளவன் தான். அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்?” என்று அண்ணாமலை கேட்டுள்ளார். 

Read Entire Article