ARTICLE AD BOX
MK Stalin Assembly News: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் (Tamil Nadu Assembly) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy), தமிழ்நாட்டில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை வேறு ஒரு நாளைக்கு விவாதமாக எடுத்துக் கொள்ளலாம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
MK Stalin Assembly News: திமுக - அதிமுக காரசார விவாதம்
இதனை அடுத்து அவையில், திமுக - அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதனை இங்கு விரிவாக காணலாம்.
எடப்பாடி பழனிச்சாமி: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் நான்கு கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் (Tamil Nadu Chief Minsiter MK Stalin) கூறிய அன்றே 4 இடங்களில் கொலை சம்பவங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறி உள்ளது.
அவை முன்னவர் துரை முருகன்: எதிர்க்கட்சித் தலைவர் அரசின் கவனத்தை ஈர்ப்பதில் தப்பு ஒன்றும் இல்லை. என்ன நடந்தது என்பதை சொல்ல வேண்டும். பின்னர் அரசின் பதிலை கேட்க்க வேண்டும்.
சபாநாயகர் அப்பாவு: நேரமில்லா நேரத்தில் ஒரு பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.
துரை முருகன்: என்ன நடந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினால் பதிலை முதலமைச்சர் வழங்குவார். தொடங்கும்போதே குற்றச்சாட்டுடன் தொடங்குவது சரியாக வராது...
MK Stalin Assembly News: முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்
முதலமைச்சர் ஸ்டாலின்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் சம்பவம் ஆகிய பிரச்சனைகளை மறந்து விட்டார்கள். இந்த ஆட்சியை பொருத்தவரையில் நடந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுத்து இருக்கிறதா? இல்லையா ? என்பது தான் முக்கியம்...
உங்களைப் போல டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டோம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என காட்டமாக பேசினார்.
MK Stalin Assembly News: அதிமுகவினர் வெளிநடப்பு
உடன் அப்போது அதிமுகவினர் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஊறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய முற்பட்டனர்.
அப்போது முதல்வர்: எதிர்க்கட்சியினருக்கு தைரியம் இருந்தால் நான் பேசும் பதிலை கேட்டு விட்டு வெளியேரட்டும். இப்படி தைரியமின்றி ஓடுகிறீர்களே... எதிர்க்கட்சி பேசுகிற வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவில்லை... அதிமுகவினர் சட்டம் ஒழுங்கு குறித்து பேச அனுமதிக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். அவர் வெளிநடப்பு செய்ததும் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "கொலை நடைபெறவில்லை என்று கூறவில்லை. நடைபெற்று உள்ளது, அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆட்சி போன்று என நான் கூறவில்லை.
MK Stalin Assembly News: ஒரே நாளில் 4 கொலைகள் - பின்னணி
குற்றங்களை தடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து பொது அமைதியை நிலைநாட்டி தமிழ்நாடு காவல்துறை தனது தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நேற்று நான்கு கொலைகள் நடந்திருப்பதாக எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.
கோவை சம்பவம் முதல் கட்டமாக தற்கொலை எனவும் மதுரை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. சிவகங்கையில் நடைபெற்ற கொலையை விசாரித்ததில் குடும்பத் தகராறு.
முதலமைச்சர் உரை#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | #TNBudget2025 | #TamilnaduLeads |@CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/DcjKdmEiv4
— TN DIPR (@TNDIPRNEWS) March 20, 2025
ஈரோட்டில் நடைபெற்ற சம்பவம் சேலம் மாவட்டம் கிச்சி பாளையத்தில் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஜான் என்ற சாணக்கியன் என்பவர் உயர் நீதிமன்ற நிபந்தனை பிணையின் அடிப்படையில் அன்னதானபட்டி காவல் நிலையத்தில் கையெழுத்தை போட்டுவிட்டு, தன்னுடைய மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் காரில் சென்ற அடையாளம் தெரியாத சிலர் இருவரையும் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டார்கள்.
MK Stalin Assembly News: காவலர்கள் மீது தாக்குதல்
காயமடைந்த சாணக்கியன் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அவருடைய மனைவி சித்தோடு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இந்த சம்பவத்தில் தொடர்புடைய கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சரவணன், சதீஷ் பூபாலன், கார்த்திக் ஆகியோரை சென்ற காரை மறித்து கைது செய்ய முயற்சி செய்தனர்.
அப்போது சதீஷ் உள்ளிட்டோர் காவல்துறையினரை ஆயுதங்களால் தாக்கினார்கள். இதனால் சித்தோடு காவல் ஆய்வாளர் பாதுகாப்புக்காக அவர்களை நோக்கி சுட்டார். இதில் சதீஷ், சரவணன், பூபாலன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சதீஷ் உள்ளிட்ட நான்கு பேரும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பின்னர் கோவை அரசு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர்.
குச்சிப்பாளையத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி 2016ஆம் ஆண்டு சேலம் மாநகரில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சாணக்கியன் இரண்டாம் எதிரி என்பதால் அதற்கு பழி வாங்கும் நோக்கத்திற்காக இந்த சம்பவம் நடந்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிகின்றது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
MK Stalin Assembly News: பாரபட்சம் காட்டப்படுவதில்லை
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு நிலை குறித்து தலைவர் அவர்கள் போகிற போக்கு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் எந்த கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்த விதமான பாரபட்சமும் காட்டபடுவதிலை.
குற்ற சம்பவங்கள் நடைபெற்ற பிறகு மேற்கொள்ளப்படும் துரித நடவடிக்கைகள் ஒருபுறம் குற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மறுபுறம் என்று இரு வகைகளும் காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டவரும் குற்றவாளிகள் கூலிப்படையினர் ஆகியோரின் நடவடிக்கை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தேவையான இடங்களில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
MK Stalin Assembly News: திமு ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளன
கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் 4,521 சமூக விரோதிகள் அடையாளம் காணப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடுமையான நடவடிக்கையின் காரணமாக 2023ஆம் ஆண்டு கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்கள் குறைந்துள்ளது.
கொலை குற்றங்கள் நடைபெறும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவரும் போது அதிக எண்ணிக்கை குற்றங்கள் நடைபெறுவது போன்று தவறான கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது. உண்மையில், எண்ணிக்கையின் அளவில் பார்க்கும்போது 2024ஆம் ஆண்டு ஒப்பிடும்போது கொலை குற்றங்கள் 6.8 விழுக்காடு குறைந்துள்ளது. அதாவது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது கொலைகள் குறைந்துள்ளது. அதேபோல் பழிக்கு பழிகளில் எண்ணிக்கையும் 2024ஆம் ஆண்டில் 42.72 விழுக்காடு குறைந்துள்ளது.
MK Stalin Assembly News: குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்துள்ளோம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகளவில் கூறும் திருவிழாக்கள் பொழுதுபோக்கு இடங்கள், சுற்றுலாத்தலங்கள் போன்ற இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திட காவல்துறை கூடுதல் எண்ணிக்கையிலான ஏற்படுத்தி எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் செவ்வனே பணியாற்றி வருகின்றனர்.
குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருமாறு இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. 2023ஆம் ஆண்டில் 181 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்களில் மூலமாக தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது என்றால், 2024ஆம் ஆண்டில் 242 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்குகளில் காவல்துறை காட்டிய தீவிர அக்கறை தான் இதற்கு காரணம்.
MK Stalin Assembly News: கொலை சம்பவங்கள் குறைந்துள்ளன
இறுதியாக ஒரே ஒரு புள்ளிவிவரத்தை மட்டும் தாங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். 2012 முதல் 2024ஆம் ஆண்டிற்கான நிகழ்ந்த கொலைகளை எண்ணிக்கை ஆண்டு வாரியாக ஒப்பிட்டு பார்க்கும்போது அதிமுக ஆட்சிக்காலத்தில் அதாவது 2012 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலைகள் எண்ணிக்கை 1,943. இதுதான் கடந்த 12 ஆண்டுகளில் நடந்த மிக அதிகமான எண்ணிக்கை.
2013ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலைகள் 1927. கொரோனா காலத்தில் லாக் டவுன் இருந்தபோதும் அதிமுக ஆட்சி காலத்தில் 2020ஆம் ஆண்டில் 1661 கொலைகள் பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டுகளில் கொலைகள் நடைபெறாமல் இருக்க தற்போது நமது ஆட்சி காலத்தில் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கை காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் 2023 ஆம் ஆண்டில்தான் மிக மிக குறைவான எண்ணிக்கையில் 1540 கொலைகள் மட்டுமே நடந்துள்ளது. நடுநிலையாளர்கள் பொதுமக்களும் இது நன்கு உணர்ந்துள்ளனர்.
MK Stalin Assembly News: திமுக அரசின் மீது பழி சுமத்துகின்றனர்
குற்றங்களை தடுத்து பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து பொது அமைதியை நிலைநாட்டி தமிழ்நாடு காவல்துறை எனது தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு ஒன்றும், இங்கு ஒன்றும் ஆக முன்விரதம் காரணமாக நடைபெறும் சில நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இந்த அரசின் மீது பழி சுமத்தி அரசியல் ஆதாரம் தேட நினைப்பவர்கள், கடந்த ஆண்டில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு எப்படி சீரழிந்து இருந்தது என்பதை நான் தெரிவித்த புள்ளிவிவரங்கள் மூலமாக எண்ணி பார்க்க வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க | முக ஸ்டாலின் விரைவில் கைது செய்யப்படுவாரா? - கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர்!
மேலும் படிக்க | சீமான் அனுப்பிய தூது… இபிஎஸ் ஹேப்பி… விஜய் அப்செட்..! என்ன கணக்கு?
மேலும் படிக்க | சென்னையில் விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர பயண அட்டை பெறுவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ