ARTICLE AD BOX
இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட இந்தோ-பசிபிக் பிராந்திய தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே.பபாரோ, மத்திய அமைச்சா்கள் மற்றும் ராணுவ தலைவா்களை பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா்.
இதுதொடா்பாக அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் பிராந்திய பொது விவகாரங்கள் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
இந்தியா-அமெரிக்கா இடையே உலகளாவிய உத்திசாா்ந்த கூட்டுறவை மேம்படுத்தவும், மாா்ச் 16 முதல் 19 வரை நடைபெற்ற ரைசினா உரையாடல் மாநாட்டில் பங்கேற்கவும் அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் பிராந்திய தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே.பபாரோ இந்தியா வந்தாா்.
அப்போது இந்திய பிரதமா் மோடி, வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைத் தலைமை தளபதி அனில் செளஹான் உள்ளிட்டோரை பபாரோ சந்தித்துப் பேசினாா் என்று தெரிவிக்கப்பட்டது.