தயாரிப்பாளருக்கும், அஜீத்துக்கும் கடும் மோதல்... வரலாறு உருவான ஆன கதை..!

13 hours ago
ARTICLE AD BOX

காட் பாதர் படம்தான் பெயர் மாறி வரலாறு படமானது. 2006ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் எஸ்எஸ்.சக்கரவர்த்தி தயாரித்த படம் வரலாறு. தயாரிப்பாளர் இயக்குனர் கேஎஸ்.ரவிக்குமாரிடம் அஜீத் 100 நாள் கால்ஷீட் கொடுத்துருக்காரு. அவரை வைத்து நீங்க தான் ஒரு படத்தை இயக்கணும்னு சொன்னாராம்.

இயக்குனர் கேஎஸ்.ரவிக்குமார் இதுபற்றி அஜீத்திடம் சொன்னதும் அவரும் ஆமா கால்ஷீட் கொடுத்துருக்கேன். உங்க இயக்கத்துல ஒரு படத்துல நடிக்க ஆசைப்படுறேன். நீங்க கதையை ரெடி பண்ணுங்க. நாம படப்பிடிப்புக்குப் போகலாம்னு சொன்னாராம். அப்போது உருவான கதைதான் காட்பாதர். நவம்பர் 5ம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது.

அஜீத் நடித்த ஒரு பாடல் காட்சியை 5 நாள்கள் படமாக்கினார்கள். 6மாசத்தில் இந்தப் படம் தயாராகவில்லை. இதற்கிடையே அஜீத்துக்கும், எஸ்எஸ்.சக்கரவர்த்திக்கும் மிகப்பெரிய கருத்து வேறுபாடு வந்தது. அப்போது அஜீத் இந்தப் படத்தில் நடிக்காமல் போனதால் விநியோகஸ்தர்களும் பாதிக்கப்பட்டாங்க. அவங்களுக்கு எல்லாம் எஸ்எஸ்.சக்கரவர்த்தி கொஞ்சம் பணம் தர வேண்டி இருந்தது.

அஜீத் எஸ்எஸ்.சக்கரவர்த்தி படத்துல நடிக்கலன்னா அவரால எப்படி அந்தப் பணத்தைக் கொடுக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. இதைத் தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டன.


அதைத் தொடர்ந்து அஜீத் நடித்த படம்தான் வரலாறு. காலதாமதாக உருவானாலும் அது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் அந்தப் படத்தின் கதை அமைப்பும், அந்தக் கதையை கேஎஸ்.ரவிக்குமார் உருவாக்கி இருந்த விதமும்தான். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

2006ல் சுஜாதா கதை எழுத கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படம் வரலாறு. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். அஜீத், அசின், ரமேஷ் கண்ணா, மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர். கம்மா கரையிலே, காற்றில் ஓர் வார்த்தை, தொட்டப்புரம், தீயில் விழுந்த, இன்னிசை உள்பட பல சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன. அஜீத் முற்றிலும் மாறுபட்ட 3 கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

Read Entire Article