ARTICLE AD BOX
தமிழ் முறை திருமணத்திற்கு உலக நாடுகள் பலவற்றிலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் கூட தங்கள் திருமணத்தை நிகழ்த்திக் கொள்ள தமிழ்நாட்டில் வந்து கோவில்களில் தமிழ் முறைப்படி சடங்குகளை மேற்கொண்டு திருமணம் செய்து வருகின்றனர்.
மேலும், தமிழ் முறை வாழ்வியலை பிடித்துப் போன வெளிநாட்டவர் அங்கு வேலை செய்யவோ அல்லது படிக்கவோ வரும் தமிழர்களை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வும் அவ்வப்போது நடந்து வருகின்றது.
அந்த வகையில், தெற்கு பிரான்ஸ் நாட்டின் மொண்ட் பெல்லியர் நகரில் வசித்து வரும் யுவேஸ் அர்னேயில் லே (வயது 70) என்பவரும் மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜூலியன் சரூனா லே (60) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். தற்போது, இவர்கள் தமிழ் முறையில் திருமணம் செய்து கொள்வதற்காக சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள மானாமதுரை அருகே தாயமங்கலம் முருகன் கோவிலுக்கு வந்துள்ளனர்.
இதையும் படிங்க: வேலைக்கு சென்ற மகன் மரணம்.. செய்தி வந்த அடித்த நொடியே தாய் மாரடைப்பில் பலி.!
அங்கு உள்ளூர் மக்களிடம் தங்கள் விருப்பத்தை தெரிவித்த அவர்கள் அவர்களது உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். முழுக்க முழுக்க தமிழ் பாரம்பரிய முறைப்படி இந்த திருமணம் நிகழ்ந்து இருக்கிறது. இவர்களது இந்த முயற்சி அப்பகுதியினரை சுவாரசியத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: தனியார் நிதிநிறுவன ஊழியர் எரித்துக்கொலை? பணம் வசூலிக்கச் சென்ற இடத்தில் சடலம் மீட்பு.. பதறவைக்கும் சம்பவம்.!