ARTICLE AD BOX
மும்பை: தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்றார் மிருணாள் தாக்கூர். அவர் கூறியது: இந்தி படங்களில் நடித்துக் கொண்டே தெலுங்கிலும் நடித்தேன். பிறகு தமிழில் வாய்ப்புகள் வந்தது. இரண்டு மொழியில் பிசியாக நடித்ததால்தான் தமிழில் நடிக்கவில்லை. மற்றபடி சம்பள பிரச்னை, மொழி பிரச்னை என்று சொல்வதெல்லாம் வதந்திதான். தமிழில் நடிப்பதற்கு எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. தமிழில் நல்ல நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் இருக்கிறார்கள். அதனால் கண்டிப்பாக தமிழிலும் நடிப்பேன்.
இப்போதைக்கு பாலிவுட்டில் அடுத்தடுத்த புரொஜெக்ட்களில் தீவிரமாக இருக்கிறேன். கவர்ச்சியாக நடிப்பது எனக்கு அலுப்பு தட்டும் விஷயமாக பார்க்கிறேன். அதனால் அதிகம் நல்ல வேடங்களையும் நடிப்புக்கு தீனி போடும் கேரக்டர்களையும் எதிர்பார்க்கிறேன். மற்றபடி கவர்ச்சிக்கு நான் எதிரி கிடையாது. வலுவான கேரக்டராக இருந்து, கவர்ச்சி தேவைப்பட்டால் அப்படியும் நடிக்கத்தான் வேண்டும். ஆனால் எல்லை மீறி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். இவ்வாறு மிருணாள் தாக்கூர் கூறினார்.