ARTICLE AD BOX
மும்பை: பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான், 2017 மற்றும் 2024 க்கு இடையில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இரண்டு எஃப்ஐஆர்களை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த மனுவில் கான், “தவறாகவும் தீங்கிழைக்கும் விதமாகவும் இந்த வழக்குகளில் சிக்க வைக்கப்பட்ட ஒரு அப்பாவி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்களில் ஒன்று, நடிகர் தனுஷ் மற்றும் அவரது சக நடிகர்களுக்கு எதிராக கான் அவமதிக்கும் கருத்துக்களை தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, 2017ல் கமால் கான் பதிவிட்ட ஒரு ட்விட்டிலிருந்து தொடுக்கப்பட்டது. அந்த பதிவில், இளம் பெண்கள் பலரும் தங்களை தொடுவதற்கு தனுஷை எப்படி அனுமதிக்கிறார்கள் என கமால் கான் குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து தான் அவர் மீது வழக்கு போடப்பட்டது. இப்போது அந்த எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தை கமால் கான் நாடியுள்ளார்.