தமிழகத்தில் இந்த வங்கியில் வேலைவாய்ப்பு : டிகிரி கொடுத்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்..!!

3 days ago
ARTICLE AD BOX

பேங்க் ஆப் பரோடாவில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 4 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 233 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு உங்களது விண்ணப்பங்களை விண்ணப்பிப்பது பயன்படுத்தி கொள்ளுங்கள் …

இந்தியாவில் எஸ்.பி.ஐ, இந்தியன் வங்கி உள்பட 12 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. நாடு முழுக்க உள்ள பொதுத்துறை வங்கிகளில் எஸ்.பி.ஐ தவிர்த்து பிற வங்கிகள் பெரும்பாலான பணியிடங்களை ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக நிரப்பப்படுகிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனியாக தேர்வு நடத்தி ஆட்சேர்ப்பு நடத்தி வருகிறது. இது போக வங்கிகளில் சிறப்பு அதிகாரிகள் பணியிடங்கள், அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்கள் என பல்வேறு பணியிடங்களை அந்த வங்கிகள் உரிய அறிவிப்பு வெளியிட்டு நிரப்பி வருகிறது.

பணியிடங்கள் விவரம்: மொத்தம் 4,000 பயிற்சி பணியிடங்கள் ( Apprentice Posts)நிரப்பப்படுகின்றன. மாநிலம் வாரியாக பயிற்சி பணியிடங்கள் குறித்த விவரமும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 223 பணியிடங்கள் உள்ளன. கேரளாவில் 89, கர்நாடகாவில் 537, புதுவை 10, மகாராஷ்டிரா 388 என 27 மாநிலங்களிலும் சேர்த்து 4 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி& வயது வரம்பு: பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். 01.02.2025 தேதிப்படி 4 ஆண்டுகளுக்கு முன்பாக டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது நிரம்பியவர்களும் 28 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் 33 வயது வரையும், ஒபிசி பிரிவினர் 31 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்…!!

Read Entire Article