ARTICLE AD BOX
முகப்பருவை போக்கும் சாமந்தி..!! சாமந்தியில் உள்ள மருத்துவ குணங்கள்..!!
சாமந்திப்பூ என்பது பூஜை அறையில் மட்டும் சாமி படத்திற்கு பயன்படுத்தி நாம் பார்த்திருப்போம். கோயில்களில் மாலை கட்டுவதற்கும் இந்த சாமந்தி பூவை பயன்படுத்துவார்கள். ஆனால் முகத்தில் உள்ள முகப்பருவை போக்குவதற்கு இந்த சாமந்தியை பயன்படுத்தலாம் என்று சொன்னால் நம்புவீர்களா..?? ஆம் சாமந்தி பூவை பயன்படுத்தி முகத்தில் உள்ள முகப்பருவை போக்கலாம். அது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
சாமந்திப் பூவில் இருந்து எடுக்கப்படும் எண்ணையை பெண்களின் எண்ணெய் என்று கூறுவார்கள். அந்த அளவுக்கு பெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்க்கும் மலர்தான் சாமந்திப்பூ. சாமந்திப் பூக்களை தண்ணீரில் போட்டு குளித்தால் காயங்கள் முகப்பரு தழும்புகள் ஆகியவை படிப்படியாக மறைய ஆரம்பிக்கும். சாமந்திப்பூ ஊறவைத்த தண்ணீரில் பஞ்சை நனைத்து கண்களின் மீது வைத்தால் கருவளையம் சரியாகும். சாமந்தி பூவை நீரில் போட்டு குளிப்பதன் மூலம் சருமம் வறட்சி இல்லாமல் இருக்கும்.