ARTICLE AD BOX
Red Onion vs White Onion : சிவப்பு வெங்காயம் அல்லது வெள்ளை வெங்காயம் இவை இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை குறித்து இங்கு காணலாம்.

இந்திய சமையலறையில் வெங்காயத்திற்கு தனி சிறப்பு இடம் உண்டு. வெங்காயம் சமையலுக்கு கூடுதல் ருசி தருவது மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது. வெங்காயத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அதாவது சிவப்பு வெங்காயம் மற்றும் வெள்ளை வெங்காயம் என்று. இவை பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக தோன்றினாலும், இவற்றின் வகைகள் வெவ்வேறு வேறுபாடுகள் உள்ளன. மேலும் இவை இரண்டு எதில் அதிக மருத்துவ குணம் உள்ளன என்று பலருக்கு சந்தேகம் உண்டு. இதுகுறித்து இங்கு காணலாம்.

வெங்காயம் இல்லாமல் சமையல் முழுமை அடையாது. இதனால்தான் ஒவ்வொரு நாளும் வெங்காயத்தின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சிவப்பு அல்லது வெள்ளை வெங்காயத்தில் வேறுபாடுகள் இருந்தாலும் எல்லா வகையான உணவுகளை தயாரிக்கவும் அவற்றை பயன்படுத்தலாம். இந்த இரண்டு வகையான வெங்காயங்களுக்கு இடையான வித்தியாசம் என்னவென்றால் நிறம், சுவை, ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் சமையல் பயன்பாடுகளின் வேறுபாடு ஆகும்.
இதையும் படிங்க: வெங்காயம் மூலம் ஈஸியா எடையைக் குறைக்கலாம்! ஆனா இப்படி தான் சாப்பிடணும்!

- சிவப்பு வெங்காயம் அடர் சிவப்பு முதல் ஊதா நிறத்தில் வெளிப்புற அடுக்குகளால் ஆனது. உட்புறம் வெள்ளை நிறத்தில் இருக்கும். மொத்தத்தில் இது ஒரு தனித்துவமான தோற்றத்தைக் கொண்டது. அதுவே வெள்ளை வெங்காயம் முற்றிலும் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும் அவற்றின் உட்புற சதையும் வெண்மையாக தான் இருக்கும்.
- சிவப்பு வெங்காயத்தை சமையலுக்கு மட்டுமல்ல அதைப் பச்சையாக கூட சாப்பிடலாம். அதுவே வெள்ளை வெங்காயமானது மேற்கத்திய உணவுகள், குறிப்பாக சூப்களில் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
- சிவப்பு வெங்காயம் சற்று காரமான சுவையை கொண்டது. இதன் சுவையானது ஒட்டுமொத்த உணவின் சுவையையும் மேம்படுத்தும். அதுவே வெள்ளை வெங்காயமானது இனிமையான சுவையைக் கொண்டது. அதனால் தான் இது சூப்கள் சாண்ட்விச்கள் போன்ற உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.
- சிவப்பு வெங்காயத்தில் நீர் உள்ளடக்கம் குறைவாக உள்ளது. அதுவே வெள்ளை வெங்காயத்தில் நீர் உள்ளடக்கம் அதிகமாக இருக்கும்.

வெள்ளை வெங்காயத்தில் இருக்கும் நார்ச்சத்து வயிற்றுக்கு ரொம்பவே நல்லது இது உணவை விரைவில் ஜீரணிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி இந்த வெங்காயம் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஏனெனில் இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சிறப்பு பண்புகளை கொண்டுள்ளன. வெள்ளை வெங்காயம் சருமம் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் முடி உதிர்வை தடுக்க இது பெரிதும் உதவுகிறது. இந்த வெங்காயத்தில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.
இதையும் படிங்க: வெறும் வெங்காய சாறு தானேனு நினைக்காதீங்க; இந்த '5' நன்மைகள் கிடைக்கும்!

சிவப்பு வெங்காயம் சமையலில் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இது இதயத்தை பாதுகாக்கவும், தொற்று நோய்கள் ஏற்படுவதை தடுக்கவும், ரத்தத்தை சுத்தப்படுத்தவும், கொழுப்பை கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றன. இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் சல்பர் கிருமிகளை எதிர்த்து போராட முக்கிய பங்கு வகிக்கின்றன. இது தவிர சர்க்கரை நோயாளிகளின் உடலில் அதிக இன்சுலின் உற்பத்தி செய்யும்.