பாரத் பெட்ரோலியத்தில் ரூ.75 ரூபாய் இலவச பெட்ரோல்: 28ம் தேதிவரை சலுகை மக்களே..!

2 hours ago
ARTICLE AD BOX

பணவீக்கம் அனைவரின் நிலைமையையும் மோசமாக்கியுள்ள நிலையில், யாராவது உங்களுக்கு 75 ரூபாய் மதிப்புள்ள பெட்ரோலை இலவசமாகக் கொடுத்தால், நாம் வேண்டாம் என்றா சொல்வோம்..? அரசு எரிபொருள் எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் இந்தச் சலுகையை அறிவித்துள்ளது. அங்கு நீங்கள் ரூ.75 மதிப்புள்ள இலவச பெட்ரோல் பெற்றுக் கொள்ளலாம்.

நீங்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று 75 ரூபாய் மதிப்புள்ள பெட்ரோல் இலவசமாகப் பெறலாம். நிறுவனத்தின் இந்த சலுகை பிப்ரவரி 28 வரை நீடிக்கும். இந்த சலுகையின் பலனை எப்படி பெறுவது?

பாரத் பெட்ரோலியம் தனது நிறுவன தினத்தை முன்னிட்டு இந்த சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 2025 பிப்ரவரி 28 வரை நீடிக்கும். இந்தச் சலுகையில் பங்கேற்க, நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். டீலர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அந்நிறுவனத்தின் வர்களது ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனாலும், இந்தச் சலுகைக்கு சில மாநிலங்களில் அந்த நிறுவன ஊழியர்கள் டீலர்களுக்கு குறிப்பிட்ட மாநிலங்களில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பாரத் பெட்ரோலியத்தின் இந்த சலுகையைப் பெற, உங்கள் மொபைல் எண்ணை பெட்ரோல் பம்பில் பதிவு செய்ய வேண்டும். 1000 வரை கேஷ்பேக் பெறலாம். இந்தச் சலுகையைப் பெற, வாடிக்கையாளர்கள் பாரத் பெட்ரோலியம் பெட்ரோல் பம்பிலிருந்து பெட்ரோலுடன் குறைந்தபட்சம் ஒரு பாக்கெட் MAK 4T எஞ்சின் ஆயில் வாங்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு?File Photo

எஞ்சின் ஆயில் வாங்கினால், உடனடியாக ரூ.75 மதிப்புள்ள பெட்ரோல் இலவசமாக கிடைக்கும். நீங்கள் விரும்பினால், பாரத் பெட்ரோலியம் பெட்ரோல் பம்பில் எஞ்சின் ஆயிலை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். இது மட்டுமல்லாமல், அதன் பெட்டியில் ஒரு QR ஸ்கேன் குறியீட்டைப் பெறுவீர்கள்.

இந்த QR குறியீட்டை பெட்ரோல் பம்பில் உள்ள ஊழியர் ஸ்கேன் செய்வார். இதன் மூலம் நாம் ரூ.1,000 வரை கேஷ்பேக்கையும் பெற முடியும். இந்த சலுகையின் பலன் ஒரு மொபைல் எண்ணிற்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் என்று நிறுவனம் தெளிவாகக் கூறுகிறது. எதிர்காலத்தில் மேலும் சலுகைகள் பற்றிய தகவல்களை உங்களுக்கு அனுப்ப பாரத் பெட்ரோலியம் உங்கள் எண்ணைப் பயன்படுத்தலாம்.

Read Entire Article