தமன்னா-விஜய் வர்மா லவ்மேரேஜ் பிரேக்கப் ஆனாலும், நட்பு ரீதியான உறவில் ஆர்வம்?

3 hours ago
ARTICLE AD BOX
tamannaah and vijay varma celebrate holi together

நாங்கள் நட்பாக பிரிகிறோம் என்பதுபோல, நாங்கள் நட்பான உறவில் தொடர்கிறோம் என சொல்லாமல் சொல்லிய நிகழ்வு பார்ப்போம்..

கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்த தமன்னா – விஜய் வர்மா இருவரும், பிரேக்கப் செய்து பிரிந்து விட்டதாக கூறப்பட்டது.

இந்த ஆண்டு, இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பிரேக்கப் செய்தி தீவிர ரசிகர்களை ஃபீல் பண்ண வைத்தது. இவர்களின் பிரேக்கப்புக்கு காரணம், ‘இந்த ஆண்டு தமன்னா திருமணம் செய்து கொள்வதில், ஆர்வம் காட்டியதாகவும் ஆனால் விஜய் வர்மா அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் பின்னரே இனி பிரியலாம் என முடிவு செய்தார்களாம். ஆனால், இதுகுறித்து இருவருமே வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், இருவரும் வலைத்தளத்தில் இருந்து ஒன்றாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை நீக்கியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் ஒரே இடத்தில் அதாவது ரவீனா டாண்டன் இல்லத்தில் நடந்த ஹோலி கொண்டாட்டத்தில், கலந்து மகிழ்ந்துள்ளனர். இதுகுறித்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

பொதுவாக பிரபலங்கள் பிரேக்கப் ஆகிவிட்டாலும், நட்பு ரீதியான உறவை தொடர்வதில் ஆர்வம் காட்டுவார்கள். தமன்னாவும் – விஜய் வர்மாவும் அப்படித்தான் கலந்து கொண்டார்கள் என நாகரிகமாகவும் சொல்லப்படுகிறது.

tamannaah and vijay varma celebrate holi togethertamannaah and vijay varma celebrate holi together

The post தமன்னா-விஜய் வர்மா லவ்மேரேஜ் பிரேக்கப் ஆனாலும், நட்பு ரீதியான உறவில் ஆர்வம்? appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article