ARTICLE AD BOX
தங்கம் விலையில் தொடர்ந்து ஷாக்.. இன்றும் விலை ஏற்றம்.. இப்போ சவரன் ரூ.65000-ஐ நெருங்கியது..!!
தங்கம் விலை ஆனது இன்று பிப்ரவரி 24 நிலவரப்படி, ஏற்றம் கண்டுள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்திருக்கிறது. 22 கேரட் தங்கம் மட்டுமின்றி 24 கேரட் தங்கமும் 11 ரூபாய் அதிகரித்துள்ளது. 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 8,055-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,787-க்கும் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்கும் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நேற்றைய (21/02/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 8,045-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 64,360-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.80,045-க்கும் விற்பனையானது.

அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,776-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 70,208-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 87,776-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,581-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 52,648-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 65,810-க்கும் விற்பனையானது.
இன்றைய (22/02/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.10 அதிகரித்து ரூ. 8,045-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.80 அதிகரித்து ரூ. 64,440-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.80,450-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.11 அதிகரித்து ரூ. 8,787-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.88 அதிகரித்து ரூ. 70,296-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 87,870-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் ரூ. 6,582-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 52,656-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 65,820-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. 1 கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.1,08,000-த்திற்கு விற்பனையாகிறது.