ARTICLE AD BOX
ரூபாய் நோட்டுகளை அன்றாடம் பயன்படுத்தினாலும் அதில் இருக்கும் குறியீடுகளை கவனிக்கத் தவறி இருப்போம். சில குறியீடுகள் எதற்காக ரூபாய் நோட்டுகளில் உள்ளன என்பது குறித்தும் பலருக்கும் தெரிந்திருக்காது.
அந்த வகையில் ரூபாய் நோட்டுகளின் நுனிப்பகுதியில் இருக்கும் கோடுகள் எதற்காக அச்சிடப்பட்டிருக்கிறது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளவோம்.
இந்திய ரூபாய் நோட்டுகளில் பல்வேறு சின்னங்கள், குறியீடுகள் அடையாளங்கள் இருக்கும். அப்படி ரூபாய் நோட்டுகளின் இடது அல்லது வலது புற பக்கத்தின் விளிம்புகளில் சாய்வலான கோடுகள் இடம் பெற்றிருக்கும்.

RBI விதிமுறைப்படி, பார்வை குறைபாடு உள்ளவர்கள் ரூபாய் நோட்டின் மதிப்பை அடையாளம் காண வசதியாக இவ்வாறு ரூபாய் நோட்டுகளின் விளிம்புகளில் கோடுகள் இடம் பெற்று இருக்கும்.
இந்த கோடுகள் ரூ.100 முதல் ரூ.2000 வரை உள்ள நோட்டுகளில் மட்டும் தான் இருக்கும். ஒவ்வொரு நோட்டுகளுக்கு தகுந்தார் போல வரிகள் இருக்கும், எடுத்துக்காட்டாக நூறு ரூபாய் தாளில் அதன் இருபுறமும் நான்கு கோடுகள் இருக்கும். இருநூறு ரூபாய்நோட்டுகளில் நான்கு வரிகள் இருக்கும்.
அதே போல ஐந்நூறு நோட்டுகளில் ஐந்து வரிகளும், இரண்டாயிரம் நோட்டில் ஏழு வரிகளும் இருக்கும். இதன் மூலம் பார்வையற்றவர்கள் ரூபாய் நோட்டின் மதிப்பை புரிந்து கொள்ள முடியும். இதனால் அவர்கள் ஏமாறாமல் தடுக்கப்படுகின்றனர்.