ARTICLE AD BOX
சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.560 உயர்ந்தது. கடந்த 26ம் தேதி ஒரு பவுன் ரூ.64,400 ஆகவும், 27ம் தேதி பவுன் ரூ.64,080 ஆகவும், 28ம் தேதி பவுன் ரூ.63,680 ஆகவும், மார்ச் 1ம் தேதி ரூ.63,520 ஆகவும் தங்கம் விலை குறைந்தது. தொடர்ந்து 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1080 வரை குறைந்தது. வாரத்தின் தொடக்கமான நேற்று முன்தினம் தங்கம் விலையில் எவ்வித மாற்றமின்றி ஒரு பவுன் ரூ.63,520க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,010க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.64,080க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலை 10 காசுகள் குறைந்து கிராம் ரூ.104.90க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,04,900க்கும் விற்பனை செய்யப்பட்டது.
The post தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்ந்தது appeared first on Dinakaran.