டெல்லியின் 4-வது பெண் முதலமைச்சராக பொறுப்பேற்கும் ரேகா குப்தா… இவர் யார் தெரியுமா..?

4 days ago
ARTICLE AD BOX

தலைநகர் டெல்லியில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 48 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் 27 வருடங்களுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் டெல்லியின் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் பாஜக மத்தியில் இழுப்பறி நிலவிய நிலையில் தற்போது புதிய முதல்வரை தேர்வு செய்துள்ளனர். இன்று மாலை டெல்லியின் புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து புதிய முதல்வராக ரேகா குப்தா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டெல்லியின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேகா குப்தா பாஜக முன்னாள் பொதுச் செயலாளர் ஆவார். இவர் டெல்லியின் நான்காவது பெண் முதலமைச்சர் என்ற பெருமையை  பெற்றுள்ளார். இவர் டெல்லி பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவராகவும், பாஜக தேசிய நிர்வாக குழு தலைவராகவும் இருந்துள்ளார்.

இவர் டெல்லி சட்டசபை தேர்தலில் சாலிமார் பாக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் நாளை ராம்லீலா மைதானத்தில் புதிய முதல்வராக பொறுப்பேற்கிறார். மேலும் முதலமைச்சர் பதவிக்கு நான்கு பேர் மத்தியில் கடும் போட்டி என்பது நிலவிய நிலையில் தற்போது புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Read Entire Article