ARTICLE AD BOX
பிகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தில் லாரி - டெம்போ நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை இரவு மசௌரி பகுதியில் உள்ள நூரா பாலம் அருகே நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
மசௌரி காவல் நிலைய அதிகாரி விஜய் குமார் கூறுகையில், நூரா பாலம் அருகே லாரியும் டெம்போவும் மோதி விபத்துக்குள்ளான தகவல் கிடைத்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்திய அணி வெற்றிக்கு வாழ்த்து: முதல்வர் ஸ்டாலின்
ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பலியானவர்களின் அடையாளம் கண்டறியப்பட்டு வருகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.