ARTICLE AD BOX
Published : 25 Feb 2025 05:10 AM
Last Updated : 25 Feb 2025 05:10 AM
டெல்லி சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த விஜேந்தர் குப்தா தேர்வு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த விஜேந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அக்கட்சியைச் சேர்ந்த ரேகா குப்தா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், ரோஹினி தொகுதி எம்எல்ஏ சட்டப்பேரவைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தேர்தல் முடிவுக்குப் பிறகு டெல்லி சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக அர்விந்தர் சிங் லவ்லிக்கு துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், முதல்வர் ரேகா குப்தா உட்பட அனைத்து புதிய எம்எல்ஏ-க்களுக்கும் அர்விந்தர் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து, சட்டப்பேரவைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் விஜேந்தர் குப்தா பெயரை முதல்வர் ரேகா குப்தா முன்மொழிந்தார். இதை பாஜக எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் சிர்சா வழிமொழிந்தார். பின்னர் குரல் வாக்கு மூலம் விஜேந்தர் குப்தா பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், முதல்வர் ரேகா குப்தாவும் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷியும் மரபுப்படி விஜேந்தர் குப்தாவை அழைத்துச் சென்று பேரவைத் தலைவர் இருக்கையில் அமரவைத்தனர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- 5 புற்றுநோயாளிகளில் 3 பேர் உயிரிழப்பு: ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கையில் தகவல்
- நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களை கட்டுப்படுத்தும் வேலையை செய்தேன்: சொல்கிறார் விராட் கோலி
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: பிசி - எம்பிசி சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் தீர்மானம்
- உலகில் அதிவேகமாக வளரும் இந்தியா: ம.பி. முதலீட்டாளர் மாநாட்டில் பிரதமர் மோடி புகழாரம்