இந்திய எடுத்த ஸ்டாண்ட்.. ஒரே வாக்கில் ரஷ்யா, அமெரிக்காவை ஒருசேர அதிர வைத்த மோடி.. ஐநாவில் பரபர

3 hours ago
ARTICLE AD BOX

இந்திய எடுத்த ஸ்டாண்ட்.. ஒரே வாக்கில் ரஷ்யா, அமெரிக்காவை ஒருசேர அதிர வைத்த மோடி.. ஐநாவில் பரபர

International
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐநாவில் உக்ரைனுக்கு ஆதாரவாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இன்று இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்து உள்ளது. இந்தியாவின் நிலைப்பாடு உலக நாடுகளை அதிர வைத்து உள்ளது. முக்கியமாக ரஷ்யா, அமெரிக்காவை அதிர வைத்துள்ளது.

உக்ரைனும், ஐரோப்பிய நட்பு நாடுகளும் இணைந்து ஐநாவில் கொண்டு வந்த தீர்மானம் வென்றுள்ளது. 'உக்ரைனில் விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் ஐநா பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.

donald trump vladimir putin ukraine russia war

இந்த தீர்மானம்.. உக்ரைனின் எல்லையை பாதுகாப்பது, உக்ரைனின் இறையாண்மையை பாதுகாப்பது உள்ளிட்ட விஷயங்களை உள்ளடக்கியது. முக்கியமாக உக்ரைன் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் உக்ரைனை ஈடுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இந்த தீர்மானத்தில் இடம்பெற்றது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் சமீபத்தில் தொலைபேசியில் உரையாடினர். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்க இரண்டு பேரும் ஒப்புக்கொண்டனர். டிரம்ப் இதோடு நிற்காமல்.. ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி உள்ளனர். உக்ரைன் இல்லாமலே ரஷ்யா - அமெரிக்கா இடையே இந்த போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. டிரம்ப் எடுத்த இந்த முயற்சி.. மொத்த ஐரோப்பிய கண்டத்தையும் அதிரவிட்டுள்ளது.

ஏனென்றால் உக்ரைன் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தப்படவில்லை. ஐரோப்பா நாடுகளும் இதில் ஈடுபடுத்தப்படவில்லை. இதையடுத்தே உக்ரைனும், ஐரோப்பிய நட்பு நாடுகளும் இணைந்து ஐநாவில் உக்ரைனை பாதுகாக்கும் விதமாக கொண்டு வந்த தீர்மானம் வென்றுள்ளது. உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வரைவு செய்யப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் பதிவானது, 65 வாக்கெடுப்பில் வாக்களிக்கவில்லை.

இந்தியா நிலைப்பாடு:

இந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. இந்தியாவின் நிலைப்பாடு பல நாடுகளை அதிர வைத்துள்ளது.

1. இந்த விவகாரத்தில் ரஷ்யா - அமெரிக்கா இரண்டு ஒரே பக்கத்தில் நிற்கிறது. அப்படி இருக்க, இந்தியாவும் அவர்கள் எடுத்த நிலைப்பாட்டையே எடுத்து இருக்கலாம்.

2. இத்தனை காலம் ரஷ்யாவிற்கு ஆதரவாக போனால் அமெரிக்கா கோபம் அடையும், அமெரிக்காவிற்கு ஆதரவாக போனால் ரஷ்யா கோபம் அடையும் என்ற நிலை இருந்தது. ஆனால் இனி அப்படி இல்லை ஏனென்றால் இரண்டு நாடுகளும் தற்போது ஒரே நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

3. இந்தியா இதில் உக்ரைனுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தாலும் ரஷ்யா அதை ஏற்றுக்கொள்ளும். அதேபோல் அமெரிக்காவும் ஏற்றுக்கொள்ளும்.

4. ஆனாலும் ஐநாவில் உக்ரைனுக்கு ஆதாரவாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இன்று இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்து உள்ளது. இந்தியாவின் நிலைப்பாடு உலக நாடுகளை அதிர வைத்து உள்ளது. முக்கியமாக ரஷ்யா, அமெரிக்காவை அதிர வைத்துள்ளது.

5. இதற்கு காரணம் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தது உக்ரைன் + ஐரோப்பா. உக்ரைனை பகைப்பது இந்தியாவிற்கு பெரிய சிக்கல் இல்லை. ஆனால் ஐரோப்ப நாடுகளை இந்தியா எதிர்க்க முடியாது.

6. இந்தியா எப்போதுமே அணிசேரா நாடாகவே இருந்து வந்துள்ளது. அமெரிக்கா எந்த பக்கம் இருக்கிறதோ இல்லையோ.. ரஷ்யா எந்த பக்கம் இருக்கிறதோ இல்லை.. இந்தியா அணி சேரா நாடுதான். அமெரிக்கா, ரஷ்யா உலக்போர்களில் ஒரே பக்கம் நின்றாலும் கூட இந்தியா அணிசேரா நாடாகவே இருக்கும்.

More From
Prev
Next
English summary
How does India stand on Europe's UN resolution on Ukraine war shocks USA and Russia
Read Entire Article