திமுக கட்சி ஒரு தீய சக்தி - டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு!

3 hours ago
ARTICLE AD BOX

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா சிறப்பு பொதுக்கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், தாத்தா வயதுக்காரரை அப்பா என்று அழைப்பதாக சொல்கிறார் - இது அவருக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.. சிறுமிகள் படுகின்ற பாடு சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள்... இன்றைக்கு நிகழாத நாளே இல்லை என்கிற அளவிற்கு நாம் எல்லாம் அச்சுறுத்துகின்ற அளவுக்கு இன்றைக்கு தமிழ்நாட்டிலே சட்டம் ஒழுங்கு கெட்டு கிடைக்கிறது. மாணவர்களையும் இளைஞர்களையும் குறிவைத்து போதை மருந்து பொருள்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல் - அறிக்கையில் பரபரப்பு குற்றச்சாட்டு

அவரது கையாலாக தனத்தை மறைப்பதற்காக மத்தியிலே உள்ள ஆட்சியை குறை கூறுகிறார். ஏழை எளிய மக்களின் பசியை போக்க அம்மா கொண்டு வந்த அம்மா உணவகங்கள் இன்றைக்கு கேட்பாரற்று கிடைக்கிறது. திமுகவின் இந்த கையாலாகாத அரசு இன்னும் சொல்லப் போனால் தலைநகர் தொடங்கி கடை கோடி தமிழகத்தில் உள்ள கிராமங்கள் வரை இன்றைக்கு சர்வ சாதாரணமாக கஞ்சா போன்ற போதை பொருட்லள் நடமாட்டம் ஆளுங்கட்சியின் ஆசியோடு நடைபெற்று வருகிறது. இன்னும் சொல்லப்போனால் மணல் கொள்ளையை அது போல தமிழ்நாட்டின் தாதுவளத்தை கொள்ளையடிக்கின்றவர்களை தடுக்கின்ற அரசு ஊழியர்கள் அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள் .இது போன்ற ஒரு மோசமான சூழ்நிலை இதுவரை தமிழ்நாடு சந்தித்தது இல்லை என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து கொண்டு இருக்கின்றது.

மத்திய அரசாங்கம் கொடுக்க மாட்டேங்கிறது என்று மத்திய அரசாங்கத்தின் மேல் பலி போடுகிறார்கள்.  இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு மத்திய அரசாங்கம் கொண்டு வந்திருக்கின்ற மூன்று மொழி கொள்கை தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை, இங்கே இரண்டு மொழி கொள்கை மாத்திரம் போதும், அண்ணா அவர்கள் கொண்டு வந்த இரண்டு மொழி கொள்கை மாத்திரம் போதும் என்று தமிழ்நாட்டிலே பெரும்பாலான மக்கள் விரும்புவதை இவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, இந்தியை திணிக்க பார்க்கிறார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்கிறார். மத்திய அரசு கொண்டு வந்த அந்த தேசிய கல்விக் கொள்கையிலே அவர்கள் சொல்லி இருப்பது,  இந்த கால சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்கள் மூன்றாவதாக ஒரு மொழியை அது ஏதாவது மற்ற மாநில மொழியை ஆங்கிலத்தோடு சேர்த்து மற்ற பிற மொழியை படிக்க வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால், திமுக நிர்வாகிகளும் முதல்வரும் இன்றைக்கு போகிற இடங்களில் எல்லாம் இன்றைக்கு பொய் பேசி வருகிறார். அவர் பேசியதை பார்த்து பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் நான் அந்த திட்டத்தில் கையெழுத்து போட மாட்டேன் என்கிறார். மத்திய அரசை எதிர்த்து ஒரு பக்கம் அவர்கள் பேசினாலும் திமுகவின் கட்சி நிகழ்ச்சியிலே மத்தியிலே ஆளுகின்ற அமைச்சர்கள் மத்தியிலே உள்ள துணை ஜனாதிபதி போன்றவர்கள் அதிலே கலந்து கொள்ள வேண்டும் என்று டெல்லிக்கு நடையாக நடக்கிறார்கள் சமீபத்தில் கூட கருணாநிதி நாணயத்தை உருவம் பதித்த நாணயத்தை வெளியிட மத்திய அமைச்சர் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜனாத் சிங் வந்திருந்தார். அதற்கு முன்பாக கருணாநிதி அவர்களின் சிலையை திறக்க அப்பொழுது துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கையா நாயுடு அவர்கள் வந்திருந்தார்கள்.

திமுக என்கிற தீய சக்தி அவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பதற்கு இந்த ஆட்சி ஒரு உதாரணமாக தினம் தினம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். திருப்பரங்குன்றம் பகுதியிலே அண்ணன் தம்பியாக வாழ்கின்ற மக்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்ற ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே அந்த பிரச்சனைக்கு நீதிமன்ற மூலம் தீர்வு வந்த பிறகு இன்றைக்கு இந்த உங்கள் பகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் நவாஸ்கனி அவர் வக்போர்டு தலைவர் என்ற முறையிலே அங்கே போய் பிரச்சனை உருவாக்கி அங்கே வாழ்கின்ற பிற மத மக்களை தூண்டிவிடுகின்ற விதமாக அங்கே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகின்ற விதமாக இன்றைய பல நிகழ்வுகள் நடைபெற்று வருவதை பார்க்கிறோம்.

இந்த ஆட்சியாளர்கள் எப்படியாவது சிறுபான்மை மக்களின் வாக்குகளை அவர்கள் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் தங்களை விட்டு போய்விடக் கூடாது என்பதற்காக இந்த ஆட்சியாளர்கள் அதை கண்டும் காணாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க இங்கே சகோதரர்ககாக வாழ்கின்ற அனைத்து சமுதாய மக்களுக்கு இடையே பிரச்சனைகளை உருவாக்குவார்கள். நீங்கள் இந்த பகுதி மக்கள் அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, உங்கள் பாதுகாப்பு முக்கியம் உங்களை தூண்டிவிடுபவர்கள் யார் என்பதை உணர்ந்து கொண்டு இந்த தமிழ்நாடு அம்மா அவர்கள் ஆட்சிக் காலத்திலே இருந்தது போல என்றென்றைக்கும் தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்வதற்கு நீங்கள் யாருடைய தூண்டுதலுக்கும் பலி ஆடுகளாக கூடாது என்று பேசினார்.

மேலும் படிக்க | பாலியல் தொல்லை மட்டும் இல்லை! நகை கொள்ளையிலும் ஞானசேகரன்! 120 சவரன் பறிமுதல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article