டெல்லி கணேஷ் பேரு வந்தது எப்படி தெரியுமா? ரசித்து சிரிக்க ஓர் பின்னணி

2 hours ago
ARTICLE AD BOX

நடிகர்களில் எத்தனையோ பேர் இருந்தாலும் ஒரு சிலர்தான் நம் நினைவுக்கு வருவர். அவர்களில் அற்புதமாக நடித்தவர்கள் என்றால் உடனடியாக நம் நினைவுக்கு வருவார்கள். யதார்த்தமாக ஆனால் மிகையில்லாமல் நடிக்கக்கூடிய சிறந்த குணச்சித்திர நடிகர் என்றால் அது இவர்தான்.

தமிழ்த்திரை உலகில் சிறந்த குணச்சித்திர நடிகராகப் பெயர் எடுத்தவர் மறைந்த நடிகர் டெல்லி கணேஷ். கமலுடன் நாயகன் படத்தில் பிரமாதமாக நடித்துள்ளார். இவரிடம் ஒருமுறை நடிகை சுஹாசினி தனியார் டிவிக்காக பேட்டி எடுத்தார். அப்போது அவரது பெயருக்கான காரணம் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...

பட்டினப்பிரவேசம்: நான் நடிச்ச பட்டினப்பிரவேசம் நாடகத்தைப் பாலசந்தர் பார்க்க வந்தார். அதை அப்படியே படமாக்கினார். அந்தப் படத்துல தான் எனக்கு டெல்லிகணேஷ்ங்கற பேரையே அவருதான் வச்சாரு. வேணாம் சார் எம்.கணேசன்கற பேரே இருக்கட்டும். இல்லடா சினிமாவுக்குன்னு பேன்சியா பேரு வச்சிக்கணும்.

வல்லை கணேஷ்: நிறைய கணேஷ் இருக்காங்கன்னாரு. அப்போ என் ஊரு நெல்லை. அதனால நெல்லை கணேஷ்னு வச்சிக்கறேன்னு சொன்னேன். அரசியல்வாதி மாதிரி இருக்குடான்னாரு. வேணான்டான்னாரு. எங்க ஊரு வல்லநாடு. எப்படி கும்பகோணத்தை குடந்தைன்னும், ராமநாதபுரத்தை முகவைன்னும் கூப்பிடுறாங்களோ, அதே மாதிரி எங்க ஊரை வல்லைன்னு கூப்பிடுவாங்க.


டெல்லி கணேஷ்: நான் வேணா வல்லை கணேஷ்னு வச்சிக்கறேனேன்னாரு. அதுக்கு விடிஞ்சாலே செக் வல்லை. பேமெண்ட் வல்லைன்னு வரும். எதுக்குடா நெகடிவா வச்சிக்கறே? டெல்லில நடிச்சிருக்கேலாடா... டெல்லி கணேஷ்னு வச்சிக்கோன்னாரு. அப்படித்தான் அந்தப் பேரு எனக்கு வந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இந்தியன் 2: கமலுடன் நாயகன் படத்துக்குப் பிறகு பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். அவ்வை சண்முகி படத்தில் காமெடியாகவும் வந்து கலக்குவார். இந்தியன் 2 வரை நடித்து அசத்தியுள்ளார். இப்பேர்ப்பட்ட அற்புதமான கலைஞர் மண்ணை விட்டு மறைந்தது தமிழ்த்திரை உலகிற்கே பேரிழப்பு என்றால் மிகையில்லை.

Read Entire Article