ஸ்லீவ்லெஸ் ஆடைக்காக படத்தை மறுத்த சாய் பல்லவி

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை: ஸ்லீவ்லெஸ் உடை அணிய மறுத்து, பட வாய்ப்பை நிராகரித்திருக்கிறார் சாய் பல்லவி. ஹோம்லி வேடங்களில் மட்டுமே நடிக்கும் சாய் பல்லவி, கவர்ச்சி வேடங்களில் நடிக்க மறுத்து வருகிறார். இந்நிலையில் ஒரு படத்தில் ஸ்லீவ்லெஸ் அணியக் கூட மறுத்திருக்கும் தகவல் சமீபத்தில் கசிந்துள்ளது. தெலுங்கில் பெரிய ஹிட்டான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இதில் ஹீரோயினாக ஷாலினி பாண்டே நடித்திருந்தார். இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் முதல் சாய்ஸ், சாய் பல்லவிதானாம். படத்தின் கதையை சாய் பல்லவியின் மேனேஜரிடம் சந்தீப் ரெட்டி வங்கா கூறியுள்ளார்.

இதில் வரும் முத்தக்காட்சியை போலியாக எடுத்துவிடலாம் என சந்தீப் ரெட்டி வங்கா கூறியுள்ளார். உடைகள் எப்படி இருக்கும் என மேனேஜர் கேட்டாராம். அப்போது சந்தீப் ரெட்டி, பெரும்பாலும் ஸ்லீவ்லெஸ் உடைகள் அணிய வேண்டியிருக்கும். ஆனால் ஹோம்லி லுக்தான் படத்தில் இருக்கும் என தெரிவித்துள்ளார். ஆனால் அதைக் கேட்ட மேனேஜர், அப்படியென்றால் சாய் பல்லவியை மறந்துவிடுங்கள். அவர் ஸ்லீவ்லெஸ் அணிய மாட்டார் என சொல்லியிருக்கிறார். இப்படித்தான் இந்த வாய்ப்பு ஷாலினி பாண்டேவுக்கு சென்றுள்ளது. இந்த தகவலை சந்தீப் ரெட்டி வங்கா சமீபத்தில் தெரிவித்தார்.

Read Entire Article