ARTICLE AD BOX
சென்னை: ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மிஷ்கின், ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘துப்பறிவாளன்’, ‘பிசாசு’, ‘சைக்கோ’ என அடுத்தடுத்து வித்தியாசமான படத்தை இயக்கினார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ திரைப்படம் உருவாகி உள்ளது. ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியீட்டுக்காக தயாராக உள்ளது. இயக்குநராக இருந்த மிஷ்கின் மாவீரன், லியோ போன்ற படத்தில் நடித்து நடிகராகவும் மாறினார்.
மனைவி, மகளை பிரிந்து மிஷ்கின் வாழ்ந்து வருகிறார்.
இது பற்றி அவர் கூறியது: நான் என் மனைவியிடம் ஒருமுறை விவாகரத்து செய்து கொள்ளலாமா? என்று கேட்டேன், அதற்கு அவர்கள் நான் கொடுக்க முடியாது என்று சொல்லி மிகவும் அழுதுவிட்டார். அதிலிருந்து, நான் விவாகரத்தை கேட்கவில்லை. ஏனென்றால் எனக்கு நியாயம் புரிந்தது. அதனால் நாங்கள் இரண்டு பேரும் தள்ளி நின்று தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் என் மகளை அவரிடம் கொடுத்துவிட்டேன். என் மகளிடம், ‘அம்மாவை நீ பத்திரமாக பார்த்துக்கொள்’ என்று சொல்லிவிட்டேன். இப்போது நான், சினிமாவை கல்யாணம் செய்து கொண்டேன். எனக்கு மனைவி தேவையில்லை எனக்கு சினிமா போதும். சினிமா மீதுள்ள காதலால்தான் மனைவியை பிரிந்தேன். இவ்வாறு மிஷ்கின் கூறியுள்ளார்.