டிராகன் பட வசூல் வேட்டைக்கு ஆப்பு வைக்க பிப்ரவரி 28ந் தேதி இத்தனை படங்கள் ரிலீசாகுதா?

2 hours ago
ARTICLE AD BOX

Theatre and OTT Release Movies : டிராகன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்கள் கடந்த வாரம் ரிலீஸ் ஆன நிலையில், அதற்கு ஆப்பு வைக்க பிப்ரவரி 28ந் தேதி என்னென்ன புதுப்படங்கள் வருகிறது என்பதை பார்க்கலாம்.

Theatre Release Movies on February 28

தியேட்டர் ரிலீஸ் படங்கள்

பிப்ரவரி மாதம் தமிழ் சினிமா மலைபோல் நம்பி இருந்த அஜித்தின் விடாமுயற்சி படம் தோல்வியை தழுவியதை அடுத்து, காதலர் தினத்தை ஒட்டி வெளியான படங்களும் பெரியளவில் சோபிக்கவில்லை. இந்த நிலையில் பிப்ரவரி 21ந் தேதி பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் மற்றும் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் ஆகின. இதில் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் முதல் பிரம்மாண்ட வெற்றிப்படமாக டிராகன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறாது. ஆனால் அப்படத்தின் வசூல் வேட்டைக்கு ஆப்பு வைக்க வருகிற பிப்ரவரி 28ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் படங்கள் பற்றி பார்க்கலாம்.

Aghathiyaa

அகத்தியா

பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் அகத்தியா. இப்படத்தில் நடிகர்கள் ஜீவா கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா நடித்துள்ள இப்படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் மர்ம மாளிகையை மையமாக வைத்து திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. இப்படம் வருகிற பிப்ரவரி 28ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக வாழும் நடிகர் ஜீவா! இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?

Sabdham

சப்தம்

அகத்தியா படத்துக்கு போட்டியாக நடிகர் ஆதி ஹீரோவாக நடித்துள்ள சப்தம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை அறிவழகன் இயக்கி உள்ளார். ஈரம், வல்லினம் போன்ற ஹிட் படங்களை இயக்கியவர். இப்படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடித்திருக்கிறார். மேலும் ரெடின் கிங்ஸ்லி, சிம்ரன், லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார். சத்தத்தை மையமாக வைத்து திகிலூட்டும் படமாக இந்த சப்தம் உருவாகி உள்ளது. இப்படம் பிப்ரவரி 28ந் தேதி திரைக்கு வருகிறது.

suzhal 2

சுழல் சீசன் 8 (ஓடிடி ரிலீஸ்)

ஓடிடியில் இந்த வாரம் புஷ்கர், காயத்ரி தயாரிப்பில் உருவாகி உள்ள சுழல் என்கிற சூப்பர் ஹிட் வெப் தொடரின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இந்த வெப் தொடரை பிரம்மா இயக்கி உள்ளார். இந்த வெப் தொடரில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், லால், கெளரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடருக்கு சாம் சிஎஸ் இசையமைத்து உள்ளார். இந்த வெப் தொடர் வருகிற பிப்ரவரி 28ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... Suzhal 2 : நெக்ஸ்ட் சம்பவம் லோடிங்; அதகளமாக ரிலீஸ் ஆன சுழல் 2 டிரைலர்

Read Entire Article