ARTICLE AD BOX

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விழா நடைபெற்றது. அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவரை போல பொதுமக்கள் பலரும் மலர்தூவி தங்களுடைய மரியாதையை செலுத்தினார்கள். இதனையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு நினைவுகூர்ந்து வருகிறார்கள். குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நினைவு கூர்ந்திருந்தனர். அவர்களை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி முன்னதாக ஜெயலலிதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு நினைவுகூர்ந்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியதாவது ” ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், கருணைமிக்க தலைவராகவும், திறமைமிக்க நிர்வாகியாகவும் நன்கு அறியப்பட்டவர். பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவமாகும். அவர் எப்போதும் அன்பாகவும் மக்கள் நலன் சார்ந்த முன்முயற்சிகளுக்கு ஆதரவாகவும் இருந்தவர்” என கூறியுள்ளார்.
ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், கருணைமிக்க தலைவராகவும், திறமைமிக்க நிர்வாகியாகவும் நன்கு அறியப்பட்டவர். பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவமாகும்.… pic.twitter.com/GM5YRH0O1H
— Narendra Modi (@narendramodi) February 24, 2025