ARTICLE AD BOX
"எனக்கு ரொம்ப ஷாக்... ரயில் நின்ற பிறகு சுமார் 2 கி.மீ தூரம் ஓடிபோய் எனது ஹேண்ட் பேக்கை எடுத்தோம்!" - ஓடும் ரயிலில் காவலரால் பாதிக்கப்பட்ட சின்னத்திரை துணை நடிகை பரப்பரப்பு பேட்டி.
கடந்த 23ஆம் தேதி காலை பெங்களூரில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் பயணித்த சின்னத்திரை நடிகையிடம் ஹேண்ட் பேக் திருடிய வழக்கில் ஓட்டேரி காவல் நிலைய காவலர் வசந்தகுமார் என்பவர் சென்ட்ரல் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட காவலர் வசந்தகுமார் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சின்னத்திரை நடிகை, இன்று செய்தியார்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்., "பெங்களூர் போய்விட்டு ரயிலில் என் அம்மா சித்தியுடன் வந்து கொண்டிருந்தேன். நான் ரயிலில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென பையை இழுப்பது போன்று தோன்றியது. எடுத்துக்கொண்டு ஓடுவது போன்று தோன்றியது. நானே ஓடிப் போய் பிடித்து விட்டேன். தன்னுடைய ஹேண்ட் பேக்கை எடுத்து அவரது பையில் வைத்து ரயிலில் இருந்து வெளியில் மர்ம நபர் வீசி எறிந்தார். உடனடியாக சக பயணிகள் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்தார்கள். அதன் பின் ரயிலை விட்டு இறங்கி நானும் அம்மாவும் தண்டவாளத்தில் ஓடினோம். அதன் பிறகு பையை மீட்டு புறநகர் ரயில் மூலமாக சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தோம். காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்., "அந்த சம்பவம் ஒரு சில நிமிடங்களுக்குள்ளாகவே நடந்தது. தான் சத்தம் போட்டவுடன் சக பயணிகள் உதவியுடன் பிடித்தேன். பையை வெளியில் எறிந்தவுடன் நான் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து விட்டேன். பையை வெளியே எறிந்த பிறகு ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று பையை எடுத்தோம். பிடிப்பட்ட அவரை பெண் போலீசாரிடம் ஒப்படைத்தோம்." எனக்கூறினார்.
மேலும், "இது போன்ற சம்பவம் எனக்கே நடக்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. தடுத்து போராடும் போது எனக்கு ஏதேனும் நடந்து விடுமோ? என்ற அச்சத்தில் இருந்ததாகவும்" தெரிவித்தார்.
மேலும், "பிடிபட்ட அந்நபர், தான் ஒரு போலீஸ் எனவும் நான் ஏன் திருட போகிறேன்? என நாடகமாடியதாக தெரிவித்துள்ளார். என்னிடம் நகை இருப்பது திருடுபவருக்கு தெரியுமா? என்பது எனக்கு உறுதியாக தெரியாது. ஹேண்ட் பேக் இருக்கிறது என திருடிச் சென்றிருக்கலாம்" எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்., "நிறைய பெண்கள் தனியாக கல்லூரி செல்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். பெண்கள் தனியாக வருகிறார்கள் போகிறார்கள். எந்த நம்பிக்கையில் பெற்றோர்கள் அனுப்ப முடியும். தினமும் ரயிலில் பெண்களுக்கு ஏதாவது ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது. இந்த விவகாரத்தை பெரிய அளவில் கொண்டு சென்று முக்கியமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்குப் பின்பும் பெண்கள் பயணம் செய்வார்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். எல்லோருமே இது போன்ற சம்பவம் நிகழ்ந்தால் என்ன செய்வார்கள்?" என பேசினார்.
மேலும், "ரயிலில் இருந்து தண்டவாளத்தில் இறங்கும்போது எனது தாய்க்கு காலில் அடிபட்டது. இரண்டு நாட்களாக இந்த சம்பவத்தை நினைத்து தூங்கவே இல்லை தூக்கம் இல்லை மன அழுத்தத்துடன் இருக்கிறேன்" என பேசியுள்ளார்.