மும்பையில் இருந்து, லிப்ட் கேட்டே.. கும்பமேளாவுக்கு வந்த இளைஞர் சாதனை.! 

2 hours ago
ARTICLE AD BOX

லிப்ட் என போர்டு

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் திவ்ய ஃபபோனி (வயது 22) என்பவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள லிப்ட் கேட்டு வந்துள்ளார். அவருடைய கையில் லிப்ட் என ஒரு போர்ட் எழுதி வைத்துக் கொண்டுள்ளார். 

1500 கி.மீ பயணம்

கடந்த 12ஆம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்ட அவர் அதன் பின் பல்வேறு லாரிகள், கார்கள், ஸ்கூட்டர், பைக் என்று கிடைத்த வாகனங்களை எல்லாம் வழிமறித்து அதில் ஏறிக்கொண்டு வந்துள்ளார். இதுவரை 1500 கிலோ மீட்டர் பயணித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: Watch: 3 வது மாடியில் 2 வயது சிறுவனுக்கு காத்திருந்த எமன்; தெய்வமாக உயிரை காப்பாற்றிய நபர்.!

இன்ஸ்டா பதிவு

இரண்டு நாட்களாக பயணம் செய்த அவர் ஒரு வழியாக கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜுக்கு வந்துள்ளார். இது பற்றி தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவர் தனது instagram பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஒற்றுமையை பிரதிபலிக்கிறது

மேலும், இந்த சம்பவமானது இந்தியர்களின் இரக்க குணத்தை காட்டுகிறது என்றும், நாட்டின் ஒற்றுமை தன்மையை இது காட்டுகிறது என்றும் பல்வேறு தரப்பினர் கமெண்ட்களை போட்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க: "கும்பமேளாவுக்கு செல்ல முடியல" 40 அடி குழி தோண்டி பெண்மணி செய்த செயலால் வியப்பு.!

Read Entire Article