ஜூனியர் மகளிர் உலக கோப்பை டி20 வங்கதேசம், இங்கிலாந்து வெற்றி

3 hours ago
ARTICLE AD BOX

கோலாலம்பூர்: ஐசிசி ஜூனியர் பெண்கள் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டங்கள் நேற்றும் தொடர்ந்தன. பாங்கி நகரில் நடந்த டி பிரிவு போட்டியில் வங்கதேசம் – ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் மோதின. முதலில் விளையாடிய வங்கதேசம் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 103 ரன் மட்டுமே எடுத்தது. அதனால் வங்கதேசம் 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 விக்கெட் வீழ்த்திய வங்கதேச வீராங்கனை அனிசா அக்தர் ஆட்டநாயகி. சி பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் அமெரிக்கா-இங்கிலாந்து மகளிர் அணிகள் விளையாடின. முதலில் ஆடிய அமெரிக்கா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 119 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து 14.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 120 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் டவினா பெர்ரின் ஆட்ட நாயகி.

The post ஜூனியர் மகளிர் உலக கோப்பை டி20 வங்கதேசம், இங்கிலாந்து வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article