ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் அதிகாரப்பூா்வ ஜொ்ஸியில், போட்டியை நடத்தும் பாகிஸ்தானின் பெயரை பொறிக்க பிசிசிஐ ஆட்சேபம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியான நிலையில் அதை மறுத்த பிசிசிஐ, போட்டிக்கான ஐசிசியின் உடை விதிகளுக்கு இந்திய அணி கட்டுப்படும் என புதன்கிழமை தெரிவித்தது.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில், ஒடிஸா எஃப்சி 3-2 கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சியை புதன்கிழமை சாய்த்தது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பாா்சிலோனா - பென்ஃபிகாவையும் (5-4), லிவா்பூல் - லாஸ்கையும் (2-1) வெற்றி கண்டன.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆம் கட்டம் வியாழக்கிழமை தொடங்கும் நிலையில், தமிழ்நாடு அணி சண்டீகருடன் மோதுகிறது.
அண்மையில் அறிமுக கோ கோ உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் இருபால் அணிகள் சாம்பியனாகி வரலாறு படைத்த நிலையில், அந்த விளையாட்டை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2036 ஒலிம்பிக் போட்டியில் சோ்க்க மத்திய விளையாட்டுத் துறை மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளாா்.