ஜடேஜாவுக்கு பதில் அவரா.? ரோகித் மட்டும் இதை செஞ்சா அது நியாயமே இல்லை – ஆகாஷ் சோப்ரா பேட்டி

2 days ago
ARTICLE AD BOX

இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் தொடர் இன்று மதியம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடர்

இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் தொடரின் தனது முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. எனவே பாகிஸ்தான் அணி தொடரில் நீடிக்க நிச்சயமாக இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும்.

மேலும் இந்திய அணி பொறுத்த வரை முதல் போட்டியை விட இது மிகவும் கடினமாக இருக்கும் என்பதால், அணியில் மாற்றம் செய்ய வேண்டுமா? என்ற கேள்வியும் தற்போது எழுகிறது. சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா விக்கெட் இதுவும் கைப்பற்றவில்லை. 9 ஓவர்கள் பந்துவீசி 37 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட்டுகள் கைப்பற்றாத நிலையில், அவருக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வேண்டும் என்று சில விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இது குறித்து ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

இந்திய அணியில் மாற்றம்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடப் போகும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா? என்று கேட்டால் என்னை பொறுத்தவரை அது தேவை இல்லை என்று தான் நினைக்கிறேன். நான் நியாயமாகச் சொல்ல வேண்டும் என்றால் எல்லாரும் சிறப்பாகவே விளையாடுகிறார்கள். இந்திய அணியில் எந்த மாற்றத்தையும் நாம் காணவில்லை அர்ஸ்தீப் சிங் விளையாட முடியுமா என்ற கேள்வி இருந்தது. ஹர்ஷித் ராணா மற்றும் முகமது சமி மட்டுமே பந்து வீசுவதை காண முடியும்.

இதையும் படிங்க:222 ரன்.. யூசுப் பதான் யுவராஜ் அதிரடி.. சச்சினின் இந்திய மாஸ்டர்ஸ் அபார வெற்றி.. இலங்கை அணி சங்ககாராவின் போராட்டம் வீண்

ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தியை விளையாட வைப்பது மற்றொரு யோசனையாக இருக்கலாம். இருப்பினும் அவர் ஏன் விளையாட வேண்டும் என்கிற கேள்வி இருக்கிறது. அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாட இரண்டு போட்டிகளிலும் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். ஒரு போட்டியில் அவர் விக்கெட் எடுக்க வில்லை என்றால் அணியில் மாற்றம் செய்வீர்களா? நியாயமாக இது தேவையில்லை என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

The post ஜடேஜாவுக்கு பதில் அவரா.? ரோகித் மட்டும் இதை செஞ்சா அது நியாயமே இல்லை – ஆகாஷ் சோப்ரா பேட்டி appeared first on SwagsportsTamil.

Read Entire Article