ARTICLE AD BOX
சேலையில் காத்து வாங்கும் திவ்யா துரைசாமி.. ஸ்ட்ரெஸ் வந்தா அவ்ளோதானாமே.. ரொம்ப க்யூட் தான்!
சென்னை: செய்தி வாசிப்பாளராக கரியரை தொடங்கிய திவ்யா துரைசாமி பிறகு இஷ்பேட் ராஜாவும் இதயராணி படத்தில் ஹீரோயின் தோழியாக நடித்திருந்தார். பின்பு ப்ளூஸ்டார் படத்தில் சிறு கதாப்பாத்தரத்தில் வந்து சென்றால், தமிழ்நாட்டின் டெஸ்லா அழகி என போற்றப்படும் திவ்யா துரைசாமி சேலையில் அவர் எடுத்துள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்து ரசிகர்கள் ஜொல்லு வடிய ஆரம்பித்துவிட்டனர்.
அது என்ன டெஸ்லா அழகி என அனவைருக்கும் இந்த கேள்வி இருந்து வந்தது. குறிப்பாக சோஷியல் மீடியாவில் டெஸ்லா அழகி என்றே அழைக்கப்படுகிறார். டி ஷேப்பில் திவ்யா துரைசாமியின் தொப்புள் அழகு இருக்கும் என்பதால் அப்படி அழைப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்தனர். அவர் வெளியிடும் அனைத்து போட்டோக்களிலும் அந்த அழகிய தொப்பையை காட்டி வைரலானார். சமீபத்தில் அவர் இதுகுறித்து விளக்கமும் அளித்திருந்தார்.

தொகுப்பாளர் ஒருவர் அவரிடம் டெஸ்லா என்று அழைப்பதற்கான காரணம் குறித்து கேட்டதற்கு,
ஷூட்டிங் ஸ்பாட்டில் சிறுவர்கள் முதல் ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர் என பலரும் டெஸ்லா அக்கா என்றும் டெஸ்லா அழகி என்றும் தன்னை கூப்பிட ஆரம்பித்து விட்டனர. ஆரம்பத்தில் அது தனக்கே புரியவில்லை என்றும் அதன் பின்னர் தான் புரிந்தது என்றும் திவ்யா துரைசாமி தெரிவித்தார். தொப்புளை விட எனக்கு நல்ல இதயம் இருக்கிறது, நல்ல முகம் இருக்கிறது இதையெல்லாம் பாருங்கடா என்று சொல்லத்தோன்றும். டெஸ்லா என்று கமெண்ட் போட்டாலே கோபம் வரும் இப்போது அது பழகிவிட்டது. அவர்களை திருத்துவது என் வேலை இல்லை என திவ்யா துரைசாமி தெரிவித்தார்.

வாழை படத்தில் அவரது கதாப்பாத்திரம் பாராட்டை பெற்றது. தூதுவளை பாடல் அவரை இன்னும் பிரபலம் ஆக்கியது. மருதாணி வைக்கும் காட்சிகள் வந்தால் இனி திவ்யா துரைசாமியும் இடம் பிடிப்பார். வாழை படத்தில் வாழைத்தாரை சுமந்து படும் துயரங்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினார். மாரி செல்வராஜ் பட்ட துயரத்தை விட இது குறைவு தான் என கண்ணீருடன் தெரிவித்தார். அழகை பாதுகாப்பதை விட உணவு விசயத்தில் கராராக இருப்பேன் என்றே அவரே தெரிவித்திருக்கிறார். பிடித்த உணவு என்பதற்காக ஜங்க் புட்டெல்லாம் சாப்பிடவே மாட்டேன். வெளியே போகும்போது நல்ல உணவை தேடி தேடி சாப்பிடுவது பிடிக்கும். ஆனால், ரொம்ப கடுப்பாகி மூட் அவுட் ஆனால், 2 நாள் ஆனால் கூட சாப்பிடாமல் இருந்திருக்கேன். அந்த ஸ்ட்ரெஸ் என்னை போட்டு அழுத்தம் கொடுக்கும் என திவ்யாவே தெரிவித்தார்.
எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா துரைசாமி அவர் எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இதை பார்த்து அவரது ரசிகர்களும் அவரது அழகிய புகைப்படத்தை பார்த்து பாராட்ட தொடங்கிடுவார்கள். அதேபோன்று தற்போது, அவர் சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. கொஞ்சம் இடை தெரியும் அளவிற்கு சேலையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் ஜொல்லு வடிக்க தொடங்கிவிட்டனர். சேலையில் வந்த அழகியோ என்றும் பிரம்மன் வடித்த சிலையோ என்றும் வர்ணித்து வருகின்றனர்.