ARTICLE AD BOX

கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமலும் மணிரத்னமும் இணைந்து இருக்கும் திரைப்படம் தக் லைஃப். நாயகன் படத்திற்கு பிறகு இந்த படத்தின் மூலமாகத்தான் இருவரும் இணைந்து இருக்கிறார்கள். அதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படத்தில் சிம்பு ,திரிஷா, வடிவுக்கரசி, சேத்தன், அபிராமி ஐஸ்வர்யா லட்சுமி ,அசோக் செல்வன் என பல நடிகர்கள் நடித்துள்ளனர் .
அது போக மராட்டிய நடிகர்களும் நடித்திருப்பதாக தகவல் வந்துள்ளது. படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் திரிஷாவும் சிம்புவும் ஒரு பாடலுக்கு ஆடி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது .அதில் ஒரு செம குத்து ஆட்டம் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த பாடல் காட்சி சென்னை பிரசாந்த் ஸ்டூடியோவில் பிரம்மாண்டமாக அரங்கம் அமைத்து படமாக்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் முதல் சிங்கிள் கூடிய சீக்கிரம் வெளியாகும் என படக் குழு தெரிவித்து இருக்கிறது .அதோடு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது. அதில் கமல் மற்றும் சிம்பு வெவ்வேறு கெட்டப்களில் இருப்பது போல அந்த போஸ்டரில் தெரிகிறது. இந்த படம் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் என்றும் அந்த போஸ்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள் .
அதனால் மே மாதம் இந்த படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. அது நேரு ஸ்டேடியமாக இருக்கலாம் என்றும் தெரிகிறது. அதனால் அனைவருமே ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கும் என்று கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

simbu 1
இதுவரை இல்லாத அளவு கமலின் இந்த படத்தில் பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தை பற்றி கமல் கூறும் பொழுது மணிரத்னத்துடன் இணைந்து பணிபுரிய ரெடியாகத்தான் இருந்தேன். அதற்கு காரணம் நானும் அவரும் இணையும் பொழுது அது எதிர்பார்ப்புகள் நிறைந்ததாக இருக்கும். அதனால்தான் நாயகனுக்கு பிறகு இவ்வளவு தாமதம் என்று கூறியிருந்தார். அதனால் கண்டிப்பாக நாயகன் மாதிரி இந்த படமும் பெரிய அளவில் அதுவும் நின்னு பேசும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.