"குட் பேட் அக்லி" 2வது பாடல் அப்டேட்

19 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாக இன்னும் 24 நாள்களே உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டீசர், இதுவரை வெளியான தமிழ் படங்களின் டீசரில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கடந்த டீசர் என்ற சாதனையை படைத்தது. இப்படத்தின் 'ஓஜி சம்பவம்' பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்பாடலை ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடியுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் 2வது பாடல் தயாராகி விட்டதாகவும் அடுத்த வாரம் இப்பாடல் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இப்பாடலானது ஜெயில் பாடல் என்றும் இந்த பாடல் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

20 million views plus …. still trending at number 1 on YouTube after three days ….Thank you all and AK sir fans… it's an #OGSambavam https://t.co/8DjVSxkptG

— G.V.Prakash Kumar (@gvprakash) March 21, 2025
Read Entire Article