இந்தியா, அதன் பழமையான வரலாறு, கலாச்சாரம், மற்றும் வியப்பூட்டும் கட்டிடக்கலைக்கு பெயர் பெற்ற நாடு. உலகளவில் பெருமை சேர்த்துள்ள பல பாரம்பரிய சின்னங்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன. இங்கே இந்தியாவின் மிக முக்கியமான யுனெஸ்கோ பாரம்பரிய இடங்களைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

தாஜ்மஹால்
ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால், காதலின் சின்னமாக பார்க்கப்படும் மும்தாஜ் மகாலுக்காக ஷாஜஹான் கட்டிய வெள்ளை கோட்டை. இது 1983 ஆம் ஆண்டு யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் இணைக்கப்பட்டது. இது உலக அதிசயங்களில் ஒன்றாகவும் புகழப்படுகிறது. பளிங்கினால் கட்டப்பட்ட நினைவிடம் உலக சுற்றுலா பயணிகளை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
ஹம்பி
விஜயநகரப் பேரரசின் தலைநகரம் ஹம்பி, அதன் பிரமிக்கவைக்கும் கட்டிடக்கலையால் மிகப்பெரும் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஹம்பி அதன் பிரம்மாண்டமான கோவில்கள், அரச மாளிகைகள் மற்றும் பிரபலமான சந்தைகளுக்கு பெயர் பெற்றது. ஒரு காலத்தில் உலகெங்கிலும் இருந்து வந்த வர்த்தகர்களால் பரபரப்பாக பார்க்கப்பட்ட இடம் ஆகும். இது வரலாற்று ஆர்வலர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் கண்டு மகிழ சிறந்த இடம் ஆகும். இது யுனெஸ்கோ பாரம்பரிய தலங்களில் ஒன்றாகும்.

ஜெய்ப்பூர்
'பிங்க் சிட்டி' என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர், ராஜபுத்திர மன்னர்களின் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. அதன் கோட்டைகள், அரண்மனைகள், மற்றும் நகர வடிவமைப்பு யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அரண்மனைகளின் நகரம் என போற்றப்படும் இந்த பழமையான நகரத்திற்கு சென்று வந்தாலே பழங்கால அரசர்களின் காலத்திற்கே சென்று விட்டு வந்த உணர்வு ஏற்படும்.
அஜந்தா குகைகள்
இந்த பௌத்த குகை சிற்பங்கள் கி.மு. 2-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டன. இந்த வரலாற்று இடம் பௌத்தக் கலையை பிரதிபலிக்கிறது. உலக கட்டிடக்கலை ஆராய்ச்சியாளர்கள் பலருரையும் வியக்க வைக்கும் இடமாக இது உள்ளது. இங்கு இடம்பெற்றுள்ள சிற்பங்கள், அவற்றின் கலை நுணுக்கங்கள் ஆகியவை எந்த முறையில் வடிவமைக்கப்பட்டது என்பது ஆச்சரியமான விஷயமாக உள்ளது.
எல்லோரா குகைகள்
இந்த இடத்தில் இந்து, பௌத்த மற்றும் ஜைன மடாலயங்கள் உள்ளன. பெரும் கல் வெட்டின் உதவியுடன் சிற்பங்களை உருவாக்கிய கலையினை இது வெளிப்படுத்துகிறது. பண்டைய இந்தியர்களின் வளர்ந்த நாகரிகத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்கும் இடங்களில் இதுவும் ஒன்றாகும். இது யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய தலமாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
கஜுராஹோ, மத்திய பிரதேசம்
இந்த கோவில்கள், செக்சுவல் சிற்பங்களால் பிரபலமானவை. 10-ம் மற்றும் 12-ம் நூற்றாண்டுகளில் சந்தேல அரசர்களால் கட்டப்பட்டன. இந்தியாவின் தனித்துவமான சிற்பக் கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் தலமாகும். சிற்பக்கலை மற்றும் தொல்லியல் துறையை சேர்ந்த பலரும் தொடர்ந்த ஆய்வுகள் நடத்தும் தலமாக இது உள்ளது.

கோணார்க் சூரிய கோவில்
13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில், சூரிய தேவனுக்காக சமர்ப்பிக்கப்பட்டதாகும். சக்கர வடிவ அமைப்பு கொண்ட இந்த கோவில் பிரமிக்கவைக்கும் கலையழகைக் கொண்டுள்ளது.இங்குள்ள ராட்சத கல் சக்கரங்கள், சிக்கலான சிற்பங்கள் மற்றும் வளமான வரலாறு ஆகியவை ஒரு பாரம்பரிய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.
காசிரங்கா தேசிய பூங்கா
இந்தப் பூங்காவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள், சதுப்பு நில புல்வெளிகள் மற்றும் அயல்நாட்டு உயிரினங்கள் நிறைந்த ஒரு வனமாகும். இது பல்வேறு உயிரினங்களுக்கு மிகப்பெரிய வாழிடமாக உள்ளது. அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள இது, உயிரியல் வித்தியாசத்திற்காக முக்கியமானது.

சாஞ்சி ஸ்தூபி
இந்த பௌத்த நினைவுச் சின்னம் அசோக மன்னரால் கட்டப்பட்டது. இது இந்தியாவின் மிகப் பழமையான பௌத்த நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும்.2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த புத்த அதிசயம் அமைதியை ஆன்மீக ஞானம் கொண்ட கல் சிற்பங்களின் சின்னமாகும்.
தஞ்சை பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில், திருபுவனம் கோவில், மற்றும் கண்டியூர் கோவில் ஆகியவை இந்த பட்டியலில் அடங்கும். சோழர் கால கட்டிடக்கலையின் பெருமையை இவை பிரதிபலிக்கின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலைகள்
யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள் அனைத்தும் கல்லினால் செதுக்கப்பட்டவைகள் அல்ல. சிலவகை, இயற்கையுடன் பின்னி பிணைந்தவைகளாகவும் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைகள் அரிய வனவிலங்குகள் மூடுபனி நிறைந்த சிகரங்கள் மற்றும் மிகவும் பழமையான காடுகளின் தாயகம் ஆகும். இவை மனிதனால் கட்டப்பட்ட எந்த ஒரு நினைவுச் சின்னத்தையும் கொண்டிராத யுனெஸ்கோ பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும்.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet