சென்னையில் முதன்முறையாக நேரடி நடன நிகழ்ச்சி; மகனை அறிமுகப்படுத்திய பிரபு தேவா

3 hours ago
ARTICLE AD BOX

பிரபல நடனக் கலைஞரும், நடிகருமான பிரபுதேவா தலைமையில், சென்னையில் நடத்திய நேரடி நடன நிகழ்ச்சியில் தனது மகனை அறிமுகப்படுத்தினார். இதனால், ரசிகர்கள் பிரபு தேவா தேவாவுக்கும் அவருடைய மகனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

பிரபு தேவா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. பிரபு தேவா முதன் முறையாக நேரடி நடன நிகழ்ச்சி நடத்தியதால் ரசிகர்கள் பெரிய எண்ணிக்கையில் கலந்துகொண்டு ரசித்தனர். 

இந்நிகழ்ச்சியில், நடிகர்கள் தனுஷ், வடிவேலு, எஸ்.ஜே சூர்யா, பரத், சாந்தனு, லட்சுமி ராய், ரித்திகா சிங், அதிதி ஷங்கர், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 


இந்த நடன நிகழ்சியில் நடிகர் தனுஷும் பிரபு தேவாவும் இணைந்து ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடினார்கள். அடுத்து, பிரபு தேவா பேட்ட ராப் பாடலுக்கு நடனமாடும்போது, மேடைக்கு கீழ் உட்கார்ந்திருந்த வடிவேலுவிடம் அவர் செய்த நகைச்சுவையான செயல் ரசிகர்களைக் கவர்ந்தது. 

Advertisment
Advertisement

மேலும், பிரபு தேவா தலைமையில் நடந்த இந்த நடன நிகழ்ச்சியில், அதிதி ஷங்கர், பரத், சாந்தனு உள்ளிட்ட சிலர் இந்த நிகழ்ச்சியில் நடனமாடினர்.       

இந்நிகழ்ச்சியில், யாரும் எதிர்பாராத விதமாக பிரபு தேவா மகனும் நடனமாடினார். பிரபு தேவாவின் மகன் பேட்ட ராப் பாடலுக்குத் தந்தை பிரபு தேவாவுடன் இணைந்து நடனமாடினார். 

பிரபு தேவாவும் அவரது மகனு இணைந்து நடனம் ஆடிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரபு தேவா, “என் மகன் ரிஷி ராகவேந்திரா தேவாவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன். இது நடனத்தை விட பெரிதானது. அதாவது மரபு, ஆர்வம் மற்றும் பயணம் இப்போது தொடங்குகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதனால், சமூக வலைதளங்களில் ரசிகர்கள், நெட்டிசன்கள் பலரும் பிரபு தேவாவுக்கும் அவருடைய மகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, நடன நிகழ்ச்சியில் மகனுடன் எடுத்த ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு நடனத்தின் தொடர்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.

Read Entire Article