ARTICLE AD BOX
ஐதராபாத்: தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்க வரும் 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு தெலங்கானாவின் பிஆர்எஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்திற்கு உடன்படுகிறேன். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்ட தென் மாநிலங்களை தண்டிப்பது நியாயமற்றது. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வது ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சி முறைக்கும் எதிரானது”. என தெரிவித்துள்ளார்.
The post தொகுதி மறுசீரமைப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கு பி.ஆர்.எஸ் கட்சி ஆதரவு appeared first on Dinakaran.