சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாட்டு வருமா? குடிநீர் வழங்கல் அதிகாரி தகவல்..!

3 days ago
ARTICLE AD BOX

சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாட்டு வருமா? குடிநீர் வழங்கல் அதிகாரி தகவல்..!

சென்னையில் குடிநீர் ஆதாரங்கள் 95% நிரம்பியுள்ளதால், இந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பெய்த பருவ மழையின் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரங்களான  ஏரிகள் மற்றும் குளங்கள் 95% நிரம்பியுள்ளதாக கூறினார்.

சென்னையில் செயல்பட்டு வரும் மூன்று கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் தினமும் 350 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைப்பதால், இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் வெளியேற்றப்படும் கழிவு நீரில் 14% சுத்திகரிப்பு செய்யப்படுகிறது என்றும், சுத்திகரிக்கப்பட்ட நீரை பயனாளிகளுக்கு வழங்க ஆயிரம் லிட்டருக்கு 46 ரூபாய் செலவாகும் என்றும் அவர் கூறினார்.

அதேபோல், ஏரி மற்றும் குளங்களில் இருந்து எடுக்கப்படும் நீர் பொதுமக்களுக்கு சென்றடைய, ஆயிரம் லிட்டருக்கு 8 ரூபாய் செலவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Siva
Read Entire Article