மஹாசிவராத்திரி விரதத்தின்போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது?

3 hours ago
ARTICLE AD BOX

Mahashivaratri Viratham 2025 in Tamil : மஹா சிவராத்திரி செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை: மஹா சிவராத்திரி இந்து மதத்தின் மிக முக்கியமான மற்றும் புனிதமான பண்டிகை., இது சிவபெருமானை வழிபடுவதற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பண்டிகை. இந்த நாளில் தான் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளில் விரதம், பூஜை மற்றும் உபவாசம் இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மஹா சிவராத்திரி விரதத்தின் போது, ​​இந்த விரதம் சரியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டு புண்ணியம் பெற சில குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். இந்த நாளில் நீங்கள் முழுப் பலனையும் பெற என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மஹா சிவராத்திரி 2025: மரண பயம் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்!

மஹா சிவராத்திரி விரதம் தொடங்குவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்

விரதத்திற்கு முன் தயாராக இருக்க வேண்டும். மனதளவில் மற்றும் உடல் ரீதியாகவும் விரதம் இருப்பதற்கு முன் தயாராக இருக்க வேண்டும். ஒரு நாள் முன்னதாக அதாவது சிவராத்திரிக்கு முந்தைய இரவு, லேசான உணவு சாப்பிட்டு மன அமைதியுடன் இருக்க வேண்டும். நாளை புதன்கிழமை 26ஆம் தேதி மஹாசிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. அதன்படி இன்று முதல் நீங்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் இன்று இரவு லேசான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். குறைவாக சாப்பிட வேண்டும்.

மகாசிவராத்திரி ராசி பலன்கள்: இதெல்லாம் செய்தால் உங்களுக்கு ஜாக்பாட், அதிர்ஷ்டம் தரும் எளிய பரிகாரங்கள்!

மஹா சிவராத்திரி அன்று சிவலிங்க வழிபாடு:

  1. சிவலிங்கத்திற்கு பசுவின் பால், தேன், கங்கை நீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.
  2. பஜனை செய்யுங்கள், நாள் முழுவதும் சிவபெருமானின் பஜனை செய்வதன் மூலம் ஆன்மீக அமைதி கிடைக்கும்.
  3. விரதத்தின் போது எதுவும் சாப்பிடாமல் பழங்கள், பால் அல்லது பிற விரத உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
  4. மஹாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் விழித்திருந்து சிவபெருமானின் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

இந்த தேதியில் பிறந்தால் கோடீஸ்வரர் ஆவது உறுதி; நீங்கள் இந்த தேதியில் பிறந்திருக்கிறீர்களா?

மஹாசிவராத்திரி விரதம் இருக்கும்போது என்ன செய்யக்கூடாது

  1. இந்த நாளில் யாரையும் கெட்ட வார்த்தைகளால் திட்டாதீர்கள், எப்போதும் நல்ல எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. விரதத்தின் போது அசைவ உணவு உட்கொள்ளக்கூடாது. சைவ உணவு மற்றும் விரத உணவு மட்டுமே சாப்பிட வேண்டும்.
  3. மது, புகைப்பிடித்தல் அல்லது எந்த விதமான போதை பழக்கத்திலிருந்தும் விலகி இருக்க வேண்டும். விரதத்தின் போது தூய்மையைப் பேணுவது அவசியம்.
  4. இந்த நாளில் அதிக உடல் உழைப்பைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் விரதம் இருப்பதால் உடலில் சோர்வு ஏற்படலாம்.
  5. விரத பூஜையில் பயன்படுத்தப்படும் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Read Entire Article