குவாரிகளுக்கு செக்… இனி இணையதளம் வாயிலாக e-permit வழங்கும் நடைமுறை அமல்…!

2 hours ago
ARTICLE AD BOX

காஞ்சிபுரம் மாவட்டத்தின் குவாரி குத்தகைதாரர்களுக்கு இணையதளம் வாயிலாக e-permit வழங்கும் நடைமுறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் ஆகிய வட்டங்களில் கல்குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு குவாரிப்பணிகள் நடைபெற்று வருகிறது. குவாரிகளிலிருந்து வெட்டியெடுக்கப்படும் கனிமங்களை வெளியே எடுத்து செல்ல ஏதுவாக குத்தகைதாரர்களுக்கு வழங்கப்படும் இசைவாணைச்சீட்டு இணையதளம் வழியாக வழங்கும் நடைமுறையானது செப்டம்பர் 2024 முதல் அமலில் உள்ளது.

இந்நிலையில், வாகனங்களில் ஏற்றிச் செல்லும் கனிமங்களை கண்காணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ள அளவிற்கு கூடுதலாக கனிமம் எடுத்துச் செல்வதை தடுத்திடவுடம், வாகனங்களுக்கு வழங்கப்படும் நடைச்சீட்டினை (Transport Permit) இணையதள வாயிலாக (E-Permit) வழங்குவதற்கு அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் குவாரி குத்தகைதாரர்களுக்கு இணையதளம் வாயிலாக e-permit வழங்கும் நடைமுறை 25.02.2025 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

மேலும் குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்களை 25.02.2025 முதல் mimas.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். எனவே குத்தகைதார்கள் 25.02.2025 முதல் இணைய தளத்தில் விண்ணப்பம் செய்து எளிதாகவும், விரைவாகவும் நடைச்சீட்டு பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், குத்தகைதாரர்கள் குத்தகை உரிமம் வழங்கப்பட்ட பகுதியில் விதிகளுக்குட்பட்டு குவாரிப்பணி மேற்கொள்ளவும், வாகன ஓட்டுநர்கள் குவாரியிலிருந்து கனிமங்கள் ஏற்றிச்செல்லும் போது உரிய அனுமதி சீட்டும், கிரஷரிலிருந்து எம்-சாண்ட் ஐல்லி சிப்ஸ் போன்ற கனிமங்கள் ஏற்றிச்செல்லும் போது உரிய போக்குவரத்து நடைசீட்டும் பெற்று கனிமம் கொண்டு செல்லவேண்டும். அவற்றினை வாகன தணிக்கையின் போது வைத்திருக்க வேண்டும். உரிய அனுமதியில்லாமல் குவாரிப்பணி மேற்கொள்வது. கனிமங்கள் எடுத்துச் செல்வது கண்டறியப்படின் அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

The post குவாரிகளுக்கு செக்… இனி இணையதளம் வாயிலாக e-permit வழங்கும் நடைமுறை அமல்…! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article