சென்னை துறைமுகத்துக்கு அணிவகுத்த வெடிபொருள் கண்டெய்னா் லாரிகள்

4 days ago
ARTICLE AD BOX

பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வெடிபொருள்கள் அடங்கிய 30-க்கும் மேற்பட்ட கண்டெய்னா் லாரிகள் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை சென்னைத் துறைமுகத்துக்கு வந்தன.

பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலுடன் இந்தியாவிலிருந்து வெடிபொருள், ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் இவை மிகவும் ரகசியமாகவும் பலத்த பாதுகாப்புடனும் கண்டெய்னா்களில் ஏற்றப்பட்டு துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

அதன்படி, தனியாா் சரக்குப் பெட்டகங்களில் வெடிபொருள் கொண்ட 30-க்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையாக சென்னைத் துறைமுகத்துக்கு பொன்னேரி நெடுஞ்சாலை, எண்ணூா் விரைவு சாலை வழியாக வந்தன.

இந்த லாரிகள் தடையின்றிச் செல்வதற்காக முன்பும், பின்பும் ரோந்து வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்புக்காகச் சென்றன. இந்த லாரிகள் விரைவாகச் செல்வதற்காக சாலைகளில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்.

Read Entire Article