தனஸ்ரீ வர்மா அல்ல.. 2 ஆண்டுகளாக காதலில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்.. தங்கையால் வெளிவந்த சீக்ரெட்!

3 hours ago
ARTICLE AD BOX

தனஸ்ரீ வர்மா அல்ல.. 2 ஆண்டுகளாக காதலில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்.. தங்கையால் வெளிவந்த சீக்ரெட்!

Mumbai
oi-Yogeshwaran Moorthi
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் உறவில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஐடி ஊழியரான த்ரிஷா குல்கர்னி என்பவருடன் காதலில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், அதனை இதுவரை ரகசியமாகவே பாதுகாத்து வந்துள்ளார். இதனிடையே ஸ்ரேயாஸ் ஐயர் தங்கையுடன் த்ரிஷா குல்கர்னி நெருக்கம் காட்டி வந்த நிலையில், ரகசியம் வெளி வந்துள்ளது.

அண்மையில் இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் விவாகரத்து பெற்றனர். 18 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றனர். தனஸ்ரீ வர்மா விவகாரத்துக்கு ஸ்ரேயாஸ் ஐயரே காரணம் என்று ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் கிண்டல் செய்து வந்தனர்.

Dhanashree Verma Shreyas Iyer IND vs PAK

இந்த நிலையில் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெண் ஒருவருடன் காதலில் உறவில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அவரின் சகோதரி இருவரும் இன்ஸ்டாகிராமில் த்ரிஷா குல்கர்னி என்ற பெண்ணை பின் தொடர்ந்து வருகின்றனர். அவர்தான் ஸ்ரேயாஸ் ஐயரின் காதலி என்று தெரிய வந்துள்ளது.

இவர் 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியின் போது மும்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஜெர்சி அணிந்து ஆதரவு அளித்துள்ளார். அதேபோல் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது கேகேஆர் அணியின் ஜெர்சியுடன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆதரவாக கரகோஷம் எழுப்பி இருக்கிறார். இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை வெளிப்படையாக வைக்கவில்லை.

இருந்தாலும் ஸ்ரேயாஸ் ஐயரின் சகோதரி ஸ்ரேஸ்டா ஐயருடன் நெருக்கமாக நட்பில் இருப்பவர் த்ரிஷா குல்கர்னி. இதனிடையே ஸ்ரேயாஸ் ஐயரின் கைகளை பிடித்து த்ரிஷா குல்கர்னி இருக்கும் புகைப்படங்களும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளன. த்ரிஷா குல்கர்னி ஐடி மற்றும் ஏஐ தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், நாவல்கள் படிப்பது, சைக்கிளிங் செல்வதிலும் ஆர்வம் கொண்டவர். ஒருமுறை ஷர்துல் தாக்கூர் தனது மனைவியுடனும், ஸ்ரேயாஸ் ஐயர் தனது காதலி த்ரிஷா குல்கர்னியுடனும் சந்தித்துள்ளனர். இதன் புகைப்படங்கள் வெளியான போதே ஸ்ரேயாஸ் ஐயர் காதலில் இருக்கிறாரா என்ற கேள்விகள் எழுந்தன. இருப்பினும் இதுவரை இரு தரப்பிலும் காதலில் இருப்பது குறித்து வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
English summary
Not Dhanashree Verma, Indian Cricketer Shreyas Iyer is in relationship with his long time friend Trisha Kulkarni
Read Entire Article