ARTICLE AD BOX
சுழல் - 2 இணையத் தொடரின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளது.
நடிகர்கள் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கத்தில் உருவான வெப் தொடர் சுழல். இத்தொடரை புஷ்கர் - காயத்ரி தயாரித்தனர்.
சாம்பலூர் என்ற மலைக் கிராமத்தில் வசிக்கும் சிறுமி மாயமாகிறார். அவரை கண்டுபிடிக்க காவல் துறை ஆய்வாளராக வரும் கதிர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். இதனை மையமாகக் கொண்டு கிரைம் திரில்லராக முதல் பாகம் எடுக்கப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்தத் தொடர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இப்பாகத்தை இயக்குநர்கள் பிரம்மா மற்றும் சர்ஜுன் கேஎம் இருவரும் இயக்கியுள்ளனர்.
இதையும் படிக்க | யுவன் குரலில் வெளியான ஸ்வீட்ஹார்ட் பட பாடல்!
இரண்டாம் பாகத்திற்கான டிரைலர் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், சுழல் - 2 இணையத் தொடரின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 9 பாடல்களும், 9 இசைக் கோர்வைகளும் சேர்த்து 18 பாடல்கள் அடங்கிய இந்த ஆல்பத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
சுழல் - 2 இணையத் தொடர் வருகிற பிப். 28 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.