ARTICLE AD BOX
விராட் கோலியை கோஹினூர் வைரம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாராட்டியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நேற்று (பிப்ரவரி 23) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார்.
இதையும் படிக்க: கவர் டிரைவ் எனது பலவீனம், ஆனால்... விராட் கோலி கூறியதென்ன?
கோஹினூர் வைரம்
அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி விராட் கோலி சதம் விளாசிய நிலையில், விராட் கோலியை கோஹினூர் வைரம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசியுள்ளார். அவரது இந்த சதத்தைப் பார்த்த பிறகு, அவர் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு இந்திய அணியில் விளையாடுவார் என்பதை என்னால் கூற முடியும். அவரால் இன்னும் 10 அல்லது 15 சதங்கள் விளாச முடியும். கடினமான சூழல்களில் ஒருவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது மிகவும் முக்கியம். தனது கடினமான சூழலை திறம்பட கையாண்டு விராட் கோலி சதம் விளாசியிருக்கிறார். விராட் கோலி தலைமுறைக்கு ஒருமுறை கிடைக்கும் வீரர். அவர் கோஹினூர் வைரம் போன்றவர் என்றார்.
இதையும் படிக்க: உள்ளூர் போட்டிகள் குறித்த பிசிசிஐ-ன் முடிவு சரியானதா? ஷிகர் தவான் பதில்!
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் விராட் கோலி 111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.