ARTICLE AD BOX
சீப்ரேட்டில் தங்கம் வாங்க இந்த ஊர்களுக்கு போகலாம்? இந்தியாவை விட 15% வரை விலை கம்மி!
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் தங்கம் தான் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. ஆனால் தங்கத்தின் விலை சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் புதிதாக நகை வாங்க திட்டமிடுபவர்களுக்கு கவலை அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியாவை விட இன்னும் சில வெளிநாடுகளில் தங்கம் விலை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை குறைவாக இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
இந்தியாவில் தங்கம் விலை: இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.20 அதிகரித்து ரூ. 8,075-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.160 அதிகரித்து ரூ. 64,600-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 200 அதிகரித்து ரூ.80,750-க்கும் விற்பனையாகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.22 அதிகரித்து ரூ. 8,809-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.176 அதிகரித்து ரூ. 70,472-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.220 அதிகரித்து ரூ. 88,090-க்கும் விற்பனையாகிறது. இப்படி நாளுக்கு நாள் விலை அதிகரித்துக் கொண்டிருக்கையில் இந்தியர்கள் குறைவாக தங்கம் வாங்க கீழ்காணும் ஊர்களுக்கு செல்லலாம்.
துபாய்: "சிட்டி ஆப் கோல்ட்" என்று பிரபலமாக அறியப்படும் துபாயில் குறைந்த வரி காரணமாக தங்கம் மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது. இந்தியாவை விட இங்க விற்பனை செய்யப்படும் தங்கம் 10 முதல் 15 சதவீதம் விலை குறைவாக இருக்கும். துபாயில் தங்கத்திற்கு VAT இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. துபாயில் 1 கிராம் 22 கேரட் தங்கம் 7,773 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தாய்லாந்து: குறிப்பாக பாங்காக் மற்றும் பட்டாயா, தங்கம் வாங்குவதற்கு மற்றொரு பிரபலமான இடமாகும். இந்தியாவை விட ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் தங்க நகைகளை இந்த நாடு வழங்குகிறது, இதற்கு பெரும்பாலும் குறைந்த உற்பத்தி கட்டணங்கள் மற்றும் வரிகள் காரணமாகும். தாய்லாந்தில் தங்கம் பொதுவாக இந்தியாவை விட 5-10 சதவீதம் குறைவு.
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குறைந்த வரி விதிக்கப்படுகிறது. இந்த குறைந்த வரி விகிதம் காரணமாக தங்கம் வாங்குவதற்கு ஒரு முக்கிய இடமாக சிங்கப்பூர் திகழ்கிறது. உயர்தர தங்கத்தை விற்பனை செய்வதில் இந்த நாட்டுக்கு நல்ல நற்பெயர் இருக்கிறது. இங்கு இந்தியாவை விட 5 முதல் 8 சதவீதம் தங்கம் விலை குறைவு. ஏனெனில் சிங்கப்பூரில் தங்கத்தின் மீது ஜிஎஸ்டி இல்லை. சிங்கப்பூரில் 1 கிராம் 22 கேரட் தங்கம் 8,007 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மலேசியா: மலேசியாவில் குறிப்பாக கோலாலம்பூரில் மலிவு விலையில் தங்கத்தை வாங்கலாம். இங்கும் குறைந்த உற்பத்தி கட்டணங்கள் விதிக்கப்படுகிறது. இதனால் செய்கூலி குறைவாக தங்க நகை வாங்க முடியும். தங்கத்தை விற்பனை செய்யும் பல புகழ்பெற்ற நாடுகளில் மலேசியாவும் ஒன்று. இங்கு இந்தியாவை விட தங்கம் விலை 5 முதல் 10 சதவீதம் குறைவு.
ஹாங்காங்: தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கு இங்கும் வரி இல்லை. தங்க வர்த்தகத்திற்கான முக்கிய நாடாக ஹாங்காங் உள்ளது. பல இந்தியர்கள் இங்கு தான் தங்கத்தை வாங்குகின்றனர். இந்தியாவை விட 5 முதல் 10 சதவீதம் இங்கு தங்க விலை குறைவு.
இந்தியாவில் தங்கம் விலை ஏன் உயர்கிறது?: இறக்குமதி வரி, ஜிஎஸ்டி மற்றும் மேக்கிங் சார்ஜஸ் போன்ற காரணங்களால் தங்கம் விலை இங்கு அதிகம். இதன் விளைவாக மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிக விலையில் விற்பனையாகிறது. கூடுதலாக உலகளாவிய சந்தை போக்குகளை பொருத்தும் தங்கத்தின் விலை ஏறலாம் அல்லது இறங்கலாம்.