ARTICLE AD BOX
500 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஆப்பிள் திட்டம்!. AI தொழிற்சாலைகள்; 20000 வேலைகள் ரெடியாக போகுது..!!
அடுத்த 4 ஆண்டுகளில் அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ள ஆப்பிள் நிறுவனம், AI தொழிற்சாலைகள் அமைத்து அதன்மூலம் 20,000 வேலைவாய்ப்புகள் வழங்க டிம் குக் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் உலக நாடுகளை அலற விட்டு வருகிறார். அமெரிக்கா பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கபோவதாக எச்சரித்துள்ளார். முதற்கட்டமாக கனடா மற்றும் மெக்ஸிகோ இறக்குமதி பொருட்கள் மீது 25% வரி விதிப்பதாக அறிவித்தார். தொடர்ந்து இந்தியாவை 'மிகப்பெரிய வரி விதிப்பாளர்' என்று விமர்சனம் செய்த டிரம்ப், ரஷ்யா, சீனா, இந்தியா மீது அதிக வரி விதிக்க உள்ளதாக கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் போர் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றிய டிரம்ப், ஐரோப்பிய நாடுகளை கைகழுவி விட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் கைகோர்த்தார்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்களுக்கான வரியை 10சதவீதம் அமெரிக்கா உயர்த்தி அறிவித்தது. இதற்கு பதிலடியாக சீனா அமெரிக்க சரக்குகளுக்கு வரி விதித்தது. இந்தநிலையில், ஆப்பிள் தனது பல தயாரிப்புகளை சீனாவில் உற்பத்தி செய்கிறது மற்றும் அந்தப் பொருட்களுக்கு 10% வரிகளை எதிர்கொண்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல், ஆப்பிள் தனது தயாரிப்புகளை உலகளாவிய அளவில் உற்பத்தி செய்து, விற்பனை செய்கிறது. இது அமெரிக்காவில் பல தொழில்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
ஆப்பிள், Apple TV+, iCloud, மற்றும் App Store போன்ற சேவைகளை வழங்கி, அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் பெரும் வருமானத்தை ஈட்டுகிறது. ஆப்பிள் தனது புதிய தயாரிப்புகளால் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக உள்ளது. அது பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள், அப்ளிகேஷன்கள் மற்றும் செயலிகள் பல தொழில்களில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில், அதிபர் டிரம்பின் நிர்வாக அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்காவில் அடுத்த 4 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து 20000 வேலைவாய்ப்புகள் வழங்கவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கடந்த வாரம் அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆப்பிள் நிறுவனம், டெக்சாஸின் ஹூஸ்டனில் AI சேவையகங்களுக்காக 250,000 சதுர அடி பரப்பளவில் பெரிய தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தற்போதைய சப்ளையர்களுடன் சேர்ந்து அதன் செலவினங்களை அதிகரிக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மிச்சிகனில் ஒரு சப்ளையர் அகாடமியையும் கட்டவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தத் திட்டத்தில் மிச்சிகன், டெக்சாஸ், கலிபோர்னியா, அரிசோனா, நெவாடா, அயோவா, ஓரிகான், வட கரோலினா மற்றும் வாஷிங்டன் ஆகிய இடங்களில் தரவு மைய வசதிகளை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் Apple TV+ சேவைக்காக, அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை படமாக்குவது வரை அனைத்தும் இந்த முதலீட்டின் கீழ் அடங்கும். இது அமெரிக்கா பொருளாதாரம் மற்றும் பல தொழில்கள், உற்பத்தி முதல் பொழுதுபோக்கு வரை அனைத்திலும் ஆப்பிள் முக்கிய பங்கு வகிக்கும். இருப்பினும், கென்டக்கியில் ஐபோன்களுக்கான கண்ணாடி தயாரிக்கும் கார்னிங் போன்ற நிறுவனங்களை உள்ளடக்கிய அதன் அமெரிக்க விநியோகத் தளத்திற்கு எவ்வளவு செலவிட தயாராக உள்ளது என்பதை நிறுவனம் கூற மறுத்துவிட்டது.
ஏற்கனவே அமெரிக்கா முழுவதும் உள்ள 2.9 மில்லியன் நேரடி வேலைவாய்ப்பு மூலம், அமெரிக்காவின் உள்ளூர் சப்ளையர்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் டெவலப்பர் வேலைகளுடன் இணைந்து இந்த புதிய 20,000 வேலைவாய்ப்புகள் சேர்க்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய பதவிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மென்பொருள் மேம்பாடு, சிலிக்கான் பொறியியல் மற்றும் AI மற்றும் இயந்திர கற்றல் முன்னேற்றங்களில் கவனம் செலுத்தும் என்றும் கூறுகிறது.2021 ஆம் ஆண்டில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 430 பில்லியன் டாலர்களை உள்நாட்டில் முதலீடு செய்வதாக உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.