சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படக்காட்சி லீக்: நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ்..

4 hours ago
ARTICLE AD BOX
sivakarthikeyan 25 film parasakthi in ravimohan secne leaked

‘பராசக்தி’ படக்காட்சி லீக் ஆனது பற்றிப் பார்ப்போம்..

ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராஸி’ படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

பின்னர் ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஆனால், தற்போது தனது 25-வது படமான ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தமிழ்நாடு, இலங்கை என நடைபெற்று வருகிறது.

ஹிந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போர் கதைக்களைத்தை மையமாகக் கொண்டது ‘பராசக்தி’ கதைக்களம் என கூறப்படுகிறது.

சில காரணங்களால் சூர்யா மறுத்த இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ரவி மோகன் வில்லனாக நடிக்க, அதர்வா, ஸ்ரீலீலா, பிரித்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், ரவி மோகனின் காட்சிகளை படப்பிடிப்புத் தளத்தில் இருந்து யாரோ ஒருவர் தனது மொபைலில் படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், இந்த வீடியோவை பார்த்தவர்கள், ரவி மோகன் வெறித்தனமான வில்லத்தனத்தை வெளிக்காட்டி உள்ளார். செம மிரட்டலாக இருப்பது உறுதி என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

ஆனால் படக்குழுவினருக்கு இந்த காட்சிகள் இணையத்தில் பரவுவது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது குறித்து இணையவாசிகள் ‘ படத்தின் பரபரப்புக்காக அவங்களே சில ஃப்ரேம் லீக் பண்ணுவாங்களாம்; அதுக்கு அவங்களே ஃபீல் பண்ணுவாங்களாம்; என்னா நடிப்பு’ என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

sivakarthikeyan 25 film parasakthi in ravimohan secne leakedsivakarthikeyan 25 film parasakthi in ravimohan secne leaked

The post சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படக்காட்சி லீக்: நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ்.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article